நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்.. வங்காளதேசத்தின் இடைக்கால அரசை தலைமை தாங்குவார் - முழு விவரம்!
Bangladesh : நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் பங்களாதேஷில் உள்ள இடைக்கால அரசை தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் அதிபர் முகமது சஹாபுதீன் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்நாட்டை விட்டு வெளியேறிய அடுத்த நாளே இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வறுமையை எதிர்த்துப் போராடியதற்காக 'ஏழைகளின் பங்காளன்' என்று அன்போடு அழைக்கப்படும் யூனுஸ், அங்கு அமைந்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப், அங்கு போராடி வரும் மாணவர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
வங்கதேசத்தில் அடங்காத வன்முறை... ஹோட்டலுக்கு தீ வைப்பு... 24 பேர் உடல் கருகி பலி!
அவரை (முகமது யூனுஸ்) இடைக்கால அரசின் தலைவராக்க வேண்டும் என்ற மாணவர்களின் முன்மொழிவு கூட்டத்தில் அந்த கருத்து ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்தும் மாணவர்களும், முப்படைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். சில மணி நேரங்களுக்கு முன்பு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர், ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த மாணவர் தலைவர்கள், யூனுஸ் தலைமையில் விரைவில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 முதல் 14 முக்கிய நபர்கள் உட்பட முழு பெயர் பட்டியலை சமர்பித்துள்ளதாகவும் கூறினார்.
லிபியாவில் பாதுகாப்பு இல்லை! இந்தியர்கள் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை எச்சரிக்கை