வங்கதேசத்தில் அடங்காத வன்முறை... ஹோட்டலுக்கு தீ வைப்பு... 24 பேர் உடல் கருகி பலி!
24 பேரின் உடல்கள் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஜோஷோர் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால், பலி எண்ணிக்கை கூடலாம் அஞ்சப்படுகிறது.
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அக்கட்சி முக்கியத் தலைவருக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டதில் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் உட்பட குறைந்தது 24 பேர் உயிருடன் தீயில் கருகி பலியாகிவிட்டதாக செவ்வாய்க்கிழமை அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திங்கள்கிழமை இரவு, ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஹின் சக்லதாருக்குச் சொந்தமான ஜாபிர் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது என்றும் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் ஹோட்டலில் பணிபுரிந்த போர்டர்கள் என்றும் கூறப்படுகிறது.
நம்பிக்கை துரோகியாக மாறிய ராணுவ தளபதி! ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது எப்படி?
24 பேரின் உடல்கள் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஜோஷோர் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால், மேலும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என்று உயிர் பிழைத்த ஹோட்டல் ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை கூடலாம் அஞ்சப்படுகிறது.
அவாமி லீக் ஆட்சியை எதிர்த்து, அடையாளம் தெரியாத கும்பல், ஹோட்டலின் தரை தளத்திற்கு தீ வைத்தது. தீ விரைவாக மேல் தளங்களுக்கு பரவி பல உயிர்களை பலிகொண்டுவிட்டது.