நம்பிக்கை துரோகியாக மாறிய ராணுவ தளபதி! ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது எப்படி?
எச்சரிக்கையை மீறி ஹசீனா வக்காரை ராணுவ தளபதியாக நியமித்தார். அந்த முடிவுதான் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வங்கதேச ராணுவத் தளபதியாக ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான் நியமனம் செய்வது தொடர்பான ஆபத்துகள் குறித்து இந்திய அதிகாரிகள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எச்சரிக்கையை மீறி ஹசீனா வக்காரை ராணுவ தளபதியாக நியமித்தார். அந்த முடிவுதான் அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது என வங்கதேச அரசியலை கவனித்து வருபவர்கள் கருதுகின்றனர். திங்கட்கிழமை ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை அறிவித்த ராணுவ தளபதி வக்கார் தானே முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் இடைக்கால ஆட்சி அமைய துணைபுரிவதாகவும் கூறினார்.
அதிகரித்து வரும் இளைஞர்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, ஜெனரல் ஜமான் ஹசீனாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா முடிவுக்கு வந்தார். அவரும் அவரது சகோதரியும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வக்கார் கோரினார் என்று சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் நிலவரம் என்ன? மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர்!
எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் கலிதா ஜியாவை விடுவிக்க ராணுவம் இந்த சதித்திட்டத்தைத் தீட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நடவடிக்கை, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய சத்ரஷிபீர் உள்ளிட்ட இஸ்லாமியக் குழுக்கள் அரசியலில் ஈடுபட இடம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜெனரல் வக்கார்-உஸ் ஜமான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ராணுவ சேவையில் இருக்கிறார். ஐ.நா. ஜெனரல் எஸ்.எம். ஷஃபியுதீன் அஹமதுக்குப் பிறகு, ஜூன் மாதம் ராணுவத் தளபதியாக அவர் பதவியேற்றார். ராணுவ பள்ளி மற்றும் ராணுவ தலைமையகத்தில் இவர் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார்.
வங்கதேச ராணுவ அகாடமியில் படித்த ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான், பின்னர் மிர்பூரில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியிலும் பிரிட்டனிலும் படிப்பை தொடர்ந்தார். வங்கதேச தேசிய பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரி ஆகிய இரண்டிலும் பாதுகாப்புப் படிப்பில் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஆயுதப் படைப் பிரிவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நம்பிக்கையைப் பெற்ற முதன்மை அதிகாரியாக இருந்தார். தேசிய பாதுகாப்பு உத்திகள் மற்றும் சர்வதேச அமைதி காக்கும் முயற்சிகளை வடிவமைப்பதில் ஜெனரல் வேக்கர் வக்கார்-உஸ்-ஜமான் முக்கிய பங்கு வகித்தார். வங்கதேச ராணுவத்தை நவீனமயமாக்குவதில் பங்களித்ததற்காக கௌரவிக்கப்பட்டார்.
யார் இந்த முஜிபுர் ரஹ்மான்? வங்கதேசத்தில் இவரது சிலைகள் உடைக்கப்படுவது ஏன்?