லிபியாவில் பாதுகாப்பு இல்லை! இந்தியர்கள் செல்ல வேண்டாம் என வெளியுறவுத்துறை எச்சரிக்கை
இந்திய குடிமக்கள் லிபியாவிற்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தற்போது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
லிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்தியர்கள் லிபியாவிற்குப் அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மே 23, 2016 தேதியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் ஒரு பகுதி மாற்றம் செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்திய குடிமக்கள் லிபியாவிற்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. லிபியாவில் நிலவும் பாதுகாப்பு நிலைமையின் பிரதிபலிப்பாக, இந்திய குடிமக்கள் லிபியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை துரோகியாக மாறிய ராணுவ தளபதி! ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியது எப்படி?
லிபியாவில் வாழும் இந்தியர்களுக்கும் வெளியுறவுத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. "லிபியாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சாலை வழியாக மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தைத் தவிர்க்கவும்" என்று அறிவுறுத்தி இருக்கிறது.
லிபியாவில் வசிக்கும் இந்தியர்கள் திரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவசர உதவி தேவைப்பட்டால் +218943992046 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கதேசத்தில் அடங்காத வன்முறை... ஹோட்டலுக்கு தீ வைப்பு... 24 பேர் உடல் கருகி பலி!