nobel prize chemistry: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்,டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி என 3 விஞ்ஞானிகளுக்கு 2022ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

nobel prize chemistry: Three scientists were awarded the Nobel Prize in Chemistry.

அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்,டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி என 3 விஞ்ஞானிகளுக்கு 2022ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் ஆர். பெர்டோஜி, கே பாரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கைச் சேர்ந்த மார்டன் மெல்டல் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இவர்கள், மூவரும் சேர்ந்து, கிளிக் கெமிஸ்டரி மற்றும் பயோஆர்த்தோகோனல் கெமிஸ்டரி குறித்த ஆய்வினை செய்து பங்களிப்பு செய்தமைக்காக வழங்கப்பட்டது

 

அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. 

வருணா! மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்: விரைவில் கப்பற்படையில் சேர்ப்பு

முதல்நாளான நேற்றுமுன்தினம் மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசும் நேற்றும்  இயற்பியலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நாளை(வியாழக்கிழமை) இலக்கியத்துக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கபடுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன.

கொரோனா காலத்தில் ஏழைகளுக்கான உதவி அற்புதமானது: இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு

கடந்த ஆண்டு வேதிதியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இரு விஞ்ஞானிகளும், வேதியியல் மூலக்கூறு கட்டுமானம், புதிய வினையூக்கி கருவியை உருவாக்கியதற்ககாக வழங்கப்பட்டது.


இதில் அமெரிக்க விஞ்ஞானி பாரி ஷார்ப்லெஸ் பெறும் 2வது நோபல் பரிசாகும். 2000ம் ஆண்டில், கிளிக் கெமிஸ்டிரிக்காக பாரி ஷார்ப்லெஸ் ஏற்கெனவே நோபல் பரிசு வென்றுள்ளார். 

டென்மார்க்கைச் சேர்ந்த மார்டன் மெல்டல், ஷார்ப்லெஸ் இருவருமே கிளிக் கெமிஸ்டரி குறித்து  ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இந்த கிளிக் கெமிஸ்டிரி முறைதான் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக மருந்துத்துறை, டிஎன்ஏ மேப்பிங் ஆகியவற்றில இது அதிகமாகப் பயன்படுகிறது

அமெரிக்காவின் கரோலின் பெர்டோஜி கிளிக் கெமிஸ்டிரியை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றார். உயிரியல் மற்றும் வேதியியலை ஒருங்கிணைத்து பல்வேறு ஆய்வுகளை கரோலின் செய்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios