the world bank: கொரோனா காலத்தில் ஏழைகளுக்கான உதவி அற்புதமானது: இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் இந்திய அரசு வழங்கிய உதவியும், அளித்த ஆதரவும் அற்புதமானது என்று உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் இந்திய அரசு வழங்கிய உதவியும், அளித்த ஆதரவும் அற்புதமானது. உலகநாடுகள் மானியத்தை கைவிட்டு, இந்தியாவின் நேரடிப் பணப்பரிமாற்ற உதவியை பின்பற்ற வேண்டும் என்று உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் ஏழைகள், கூலித்தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் வேலைக்குச் செல்லமுடியாமல், ஊதியம் கிடைக்காமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து,மத்திய அரசு பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்து, இலவச உணவு தானியங்களை வழங்கியது.
இதில் கோதுமை அல்லது அரசி, பருப்பு வகைகள், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இது தவிர ஏழைப் பெண்களுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நிதியுதவி அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இதனால் கொரோனா காலத்தில் மக்கள் உணவின்றி பட்டினியில்வாடாமல் இருக்க முடிந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உலக வங்கி பாராட்டியுள்ளது. “ஏழ்மை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட வளமை அறிக்கை”- என்ற தலைப்பில் அறிக்கையை உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்டார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
உலகளவில் ஏழ்மையை குறைத்துக்கொண்டிருக்கும் முயற்சிக்கு கொரோனா பெருந்தொற்று பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பெருந்தொற்று இல்லாமல் இருந்ததால், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து தப்பித்து அடுத்தக் கட்டத்துக்கு நகர முடிந்தது. ஏழ்மை நாடுகளின் வருமானம் ஓரளவுக்கு உயர்ந்தது
ஆனால், கொரோனா பெருந்தொற்றின் வலியை, விலையை அதிகமாக ஏழை மக்கள்தான் தாங்கினார்கள். 40 சதவீத ஏழை மக்களுக்கு 4 சதவீதம் வருமானம் சராசரியாகப் பாதிக்கப்பட்டது. வருமானப் பகிர்வில் 20 சதவீத பணக்காரர்களின் இழப்பு இரட்டிபாகியது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் உலகச் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது.
ஏழ்மை நாடுகளில் உள்ள வறுமை அதிகரித்துள்ளது.அதற்கு அங்குள்ள பொருளாதாரம், சூழல் அமைப்புக்குள் வராமல் இருந்ததே காரணம். மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீணமாக இருக்கின்றன, நிதிச்செயல்பாட்டு முறைகள் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. ஆனால், வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் கொரோனா காலத்தில் அதைச்சமாளிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தேர்தலில் இருந்து சசி தரூரை விலகச் சொல்லுங்க! ராகுல் காந்திக்கு நெருக்கடியா? விவரம் என்ன?
இந்திய அரசு மக்களுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்தது பெருமளவு உதவியது. உலகநாடுகள் மானியத்தை கைவிட்டு, இந்தியாவின் நேரடிப் பணப்பரிமாற்ற உதவியை பின்பற்ற வேண்டும். மக்களுக்கு உணவு அல்லது நேரடியாகப் பணத்தை வழங்கி ஆதரவு கொடுத்தது. இதனால் கிராமப்புறங்களில் 85 சதவீதம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 69 சதவீத வீடுகளும் பயன் அடைந்தன.
தென் ஆப்பிரி்க்காவும் இதேபோன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்து 600 கோடி டாலரை ஏழை மக்கள் நிவாரணத்துக்காக வழங்கியது, இதன் மூலம் 2.90 கோடி மக்கள் பயன் அடைந்தார்கள். பிரேசில் நாடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் பணம் வழங்கி ஏழ்மை நிலையைக் குறைத்தது.
ஏழைகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணத்தைசேர்த்த இந்திய அரசின் திட்டம் சிறப்பானது. நேரடியாகப் பணம் அளிக்கும் திட்டத்தில் 60 சதவீதப் பணம் சமூகத்தில் ஏழ்மையில் உள்ள 40 சதவீத மக்களுக்கு சென்றடைந்தது. மானியத்தைவிட, பணத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
கடந்த பலதசமங்களாக அடைந்த வளர்ச்சியை கொரோனா பெருந்தொற்று வாரிச்சுருட்டிச் சென்றது. கல்வி, ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களில் இனிமேல் முதலீடு செய்வது அவசியம். அடுத்தகட்ட பேரிடர்கள், சிக்கல்களுக்கு முன்பாகவே அரசுகள் தயாராக வேண்டும்.
செலவு செய்வதை எவ்வாறு பயனுள்ளதாக்க வேண்டும் என்பதில் முன்னேற்றம் தேவை. கொள்முதலில் சிறந்த செயல்முறை, பொதுத்துறை மேலாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதால் அரசின் செலவினங்களும், அதன் தரமும் மேம்படும்.
ஏழைகளைப் பாதிக்காமல் வரிவருவாய் இருக்க வேண்டும். சொத்துவரி அறிமுகம், தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரியை விரிவுபடுத்துதல், அல்லது அதிகமானோரைக் வரிவிதிப்புக்குள் கொண்டு வருதல், வரிவிலக்குகளை திரும்பப்பெறுதல் போன்றவை பலன்தரும்
வருணா! மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்: விரைவில் கப்பற்படையில் சேர்ப்பு
மறைமுக வரிகளை உயர்த்த வேண்டும் என்றால், அவற்றின் வடிவமைப்பு பொருளாதார சிதைவுகள் மற்றும் எதிர்மறையான விநியோக தாக்கங்களைக் குறைக்க வேண்டும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் வருமானத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது