வருணா! மனிதர்களைச் சுமந்து செல்லும் ட்ரோன்: விரைவில் கப்பற்படையில் சேர்ப்பு
மனிதர்களைச் சுமந்து செல்லும் நாட்டின் முதல் ட்ரோன் “வருணா” விரைவில் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
மனிதர்களைச் சுமந்து செல்லும் நாட்டின் முதல் ட்ரோன் “வருணா” விரைவில் இந்திய கப்பற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி முன்னிலையில் இந்த வருணா ட்ரோன் செயல்விளக்கம் காட்டப்பட்டது. இப்போது பெரும்பாலான பணிகள் ட்ரோனில் முடிந்துவிட்டதால் விரைவில் கப்பற்படையில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது
தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
வருணா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன்கள், 100 கிலோ எடையுள்ள பொருட்களை தூக்கிச் செல்லும் திறன் படைத்தது. இந்த ட்ரோனை சாஹர் டிபென்ஸ் எஞ்சினியரிங் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ட்ரோன் குறித்த செயல்விளக்கத்தை செய்தி நிறுவனத்துக்கு நிறுவனம் செய்துகாட்டியது.
இதன்படி ட்ரோனில் ஒருவர் அமர்ந்து கொண்டு, சமிக்கை அளிக்கிறார். அவர் சமிக்கை அளித்தவுடன் ட்ரோன் இயக்கப்பட்டு, தரையிலிருந்து 4 மீட்டர் உயரம்வரை பறந்தது. தரையிலும் மிகுந்த பாதுகாப்போடு இறங்கியது. இந்த ட்ரோன்கள் 25 முதல்33 நிமிடங்களுக்குள் 25 கி.மீ தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்டதாகும்.
இமாச்சலில் ரூ.1470 கோடி செலவில் உருவான எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்த ட்ரோனில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் கூட, ட்ரோன் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன் உள்ளே அமர்ந்திருப்பவர் பாதுகாப்பாக இருப்பதற்காக ட்ரோனில் பாரசூட் பொருத்தப்பட்டுள்ளது.
சாஹர் டிபென்ஸ் எஞ்சினியரிங் நிறுவனத்தின் நிறுவனர் மிர்துல் பாபர் கூறுகையில் “ வருணா ட்ரோனை ஏர்-ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம். போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
0 பேர் பயங்கர தீவிரவாதிகள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்த ட்ரோன் குறித்த செயல்விளக்கம் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.