terrorist: Home Ministry: 10 பேர் பயங்கர தீவிரவாதிகள்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை சட்டவிரோத செயல்கள்(யுஏபிஏ) தடைச் சட்டத்தின் கீழ் தீவிரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 10 பேரை சட்டவிரோத செயல்கள்(யுஏபிஏ) தடைச் சட்டத்தின் கீழ் தீவிரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் ஜத், ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த பாசித் அகமது ரேஷ்,(இவர் தற்போது பாகிஸ்தானில் வசிக்கிறார்), ஜம்மு காஷ்மீர் சோப்பூரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது கண்டு என்ற சஜாத்(பாகிஸ்தானில் வசிக்கிறார்), ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஜாபர் இக்பால்(பாகிஸ்தானில் வசிக்கிறார்), ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த ஜமீல் உர் ரஹ்மான் என்ற ஷேக் சஹாப் ஆகியோர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த பிலால் அகமது பீக்(பாகிஸ்தானில் வசிக்கிறார்), பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் நைய் என்ற சுல்தான், தோடாவைச் சேர்ந்த இர்ஷத் அகமது என்ற இத்ரீஸ், குப்வாராவைச் சேர்ந்த பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ், பாரமுல்லாவைச் சேர்ந்த சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மூச்சி(பாகிஸ்தானில் வசிக்கிறார்) ஆகியோர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹபிபுல்லா மாலிக் என்ற தீவிரவாதிதான், பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில் மூளையாக செயல்பட்டவர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுக்கு ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள், தோட்டாக்கள், பணம் அனைத்தையும் வழங்குபவர்.
“இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”
காஷ்மீர் பகுதியில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர் மாலிக். 2013ம் ஆண்டு ஸ்ரீகரில் ஹைதர்போராவில் நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதலுக்கும் மாலிக் காரணமாக இருந்தார். லஷ்கர் இ தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் ஆகிய அமைப்புகளோடு மாலிக் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் உறுப்பினராக இருப்பவர் பாசித் அகமது ரேஷி. ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள், செயல்களை கண்காணிக்கும் வேலையில் உள்ளவர். 2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி சோப்பூர் பகுதியில் போலீஸ் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தியதில்இவருக்கு பங்கு உண்டு.
தீவிரவாதிகளைப் பல்வேறு இடங்களில் தொடர்பு கொண்டு அவர்களை ஒருங்கிணைத்தலை பாசித் செய்து வருகிறார். தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், ஆயுதங்கள் சப்ளை, வெடிபொருட்கள் சப்ளையும் செய்து வருகிறார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இருக்கும் மற்றொருவர் இம்தியாஸ் அகமது கண்டு, இவர் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், ஆயுதங்கள் சப்ளை, போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களை கண்காணித்தவர் இம்தியாஸ். அதுமட்டுமல்லாமல் இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளா மாற்றும் பொறுப்பிலும் இம்தியாஸ் இருந்து வருகிறார்
நவராத்திரியையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்… இணையத்தில் வைரலாகும் ஆந்திரா கோயில்!!
ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி அல்லது ஜம்மு காஷ்மீர் ஜஸ்நவி போர்ஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்கமாண்டராக ஜாபர் இக்பால் இருந்து வருகிறார். போதை மருந்து கடத்தை கண்காணிப்பது, ஆயுதங்கள் கடத்தல்,தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்தலை இவர் செய்துவருகிறார்.
அமீர் அல்லது தெஹ்ரீக் உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஷேக் ஜமீல் உர் ரஹ்மான். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதை ஷேக் செய்து வருகிறார். பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை இந்தியாவுக்கு கடத்துவது, ஆயுதங்களை வழங்குவது போன்ற செயல்களில் ஷேக் ஈடுபட்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீர இஸ்லாமிக் முன்னணி அமைப்பின் தலைவராக இருக்கும் பிலால் அகமது பீக், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிடய தொடர்பில் பிலால் இருந்து வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் கஸ்நவி போர்ஸ் தீவிரவாத அமைப்பின் கமாண்டராக இருப்பவர் ரபீக் நைய், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராகஇருப்பவர்கள் இர்ஷத் அகமது, பசீர் அகமது பீர், சவுகத் அகமது சேக். இவர்கள் மூவரும் ஆயுதங்கள் கடத்தல், நிதி திரட்டுதல், தீவிரவாத தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டுதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்
இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது