Prabhakaran: பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை - இலங்கை ராணுவம் திட்டவட்டம்
பழ. நெடுமாறன் சொல்வது போல விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வதற்கு வாய்ப்பும் இல்லை என இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று (திங்கட்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் தக்க சமயத்தில் அவர் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பதில் அளித்துள்ள இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதற்கு எந்த சான்றும் இல்லை எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த இலங்கை ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹெராத், பிரபாகரன் இறந்துவிட்டது உறுதி செய்யும் டிஎன்ஏ சான்றிதழ்கள் தங்களிடம் உள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார்.
“...எங்களிடம் உள்ள பதிவுகளின்படி, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே அவர் உயிருடன் இருப்பதாகக் கூறியவரிடம்தான் எதன் அடிப்படையில் அவ்வாறு கூறினார் என்பதைத் கேட்க வேண்டும்” என்று ஹெராத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் 2009 இல் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டார் என்று உறுதியளித்த ஹெராத், “2009ஆம் ஆண்டு போர் நிறுத்தத்துக்குப் பிறகு பிரபாகரன் இறந்துவிட்டதற்கான DNA சான்றிதழ்கள் மற்றும் பிற தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்கிறார்.
Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் இருமடங்கு அதிகமாகும் சர்வதேச விமானங்கள்!
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் கூறிய ரவி ஹெராத், “அதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை” என்று கூறிவிட்டார். ஆனால், அமைச்சர் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சபரி, வந்துள்ள செய்திகளைத் தீர ஆராய்ந்தபின் அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்று சொல்லியுள்ளார்.
Aero India 2023 Photos: கண்களுக்கு விருந்து அளிக்கும் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி!