Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் இருமடங்கு அதிகமாகும் சர்வதேச விமானங்கள்!
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. அதற்காக புதிய முனையமும் உருவாகிறது.
சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புதிதாக பல சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
பல்வேறு விமான நிறுவனங்கள் சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்காக புதிய முனையம் ஒன்றும் சென்னை விமான நிலையத்தில் உருவாகிறது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தைக் காட்டிலும் அதிகமான சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த விமானங்கள் எண்ணிக்கையிலும் பயணிகள் எண்ணிக்கையிலும் சென்னை பின்தங்கியுள்ளது. இந்த வகையில் மெட்ரோ நகரங்களில் சென்னை ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது.
இண்டிகோ நிறுவனம் பெஹ்ரைன் மற்றும் மஸ்கட் செல்லும் விமானங்களை விரைவில் சென்னையில் இருந்து இயக்க உள்ளது. இதேபோல இன்னும் பல விமான நிறுவனங்களும் சென்னையில் இருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளன.
Aero India 2023 Photos: கண்களுக்கு விருந்து அளிக்கும் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி!
ஏர் பிரான்ஸ் வாரம்தோறும் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்தாகக் கூட்டுகிறது. ஏர் அரேபியாவும் வாரத்துக்கு 2 விமானங்களுக்குப் பதிலான 3 விமானங்களை இயக்கப்போகிறது.
அடுத்த மாதம் புதிய முனையம் திறக்கப்பட்டதும் சென்னையில் விமான நிலையத்துக்கு வந்து செல்லும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என்று விமான நிலைய இயக்குநர் சரத் குமார் சொல்கிறார். புதிய முனையம் சிறப்பாக சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கானதாக இருக்கும் என்றும் அதிகரிக்கும் லக்கேஜ்களை கையாளுவதற்கு வசதியாக தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
2022 டிசம்பரில், சென்னை 2,819 சர்வதேச விமானங்களைக் கையாண்டது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2,037 விமானங்களுடன் ஒப்பிடும்போது, இது 38% அதிகமாகும். 2022 டிசம்பரில் 4,57,436 பயணிகள் சர்வதேச விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சென்றனர். டிசம்பர் 2021 இல் 2,46,387 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 85% அதிகரித்துள்ளது.
Free Scooter: தமிழகத்தை பின்பற்றுகிறதா பாஜக? திரிபுராவில் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்!