Aero India 2023 Photos: கண்களுக்கு விருந்து அளிக்கும் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி!
பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படை நிகழ்த்திய சாகசக் காட்சிகளின் படத்தொகுப்பு.
ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலகங்காவில் 14வது ஆண்டாக ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி நடைபெறுகிறது.
14வது ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறும்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அதிநவீன விமானங்கள் இந்தக் கண்காட்சியில் சாகசங்கள் நிகழ்த்துகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி வானில் சாகசத்தில் ஈடுபடும் விமானங்களை நோக்கி கை அசைத்து பாராட்டு தெரிவிக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் இந்த விமானக் கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரிய விமானக் காட்சியாக விளங்கி வருகிறது.
ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியை பொதுமக்களும் நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி 1996ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் நடக்கிறது.
கண்காட்சியின் முதல் நாளில் தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்களின் சாகச நிகழச்சிகளைக் காணலாம்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சாகசத்தில் ஈடுபடுகின்றன.
ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சி முன்னிட்டு சிறப்பு தபால்தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அஞ்சல்தலையை வெளியிட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் பொம்மை உள்ளிட்டோர் மேடையில் இருக்கின்றனர்.