9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு தலைகீழாக நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு தலைகீழாக நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கர்ப்ப காலத்தில், அதிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவது வழக்கம். சிறிய தவறு கூட குழந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணி பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்ப்ப காலத்தில், ஒன்பது மாதங்களில் பெண்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக ஜிம் மற்றும் கடுமியான உடற்பயிற்சிகள் செய்வது முற்றிலும் நின்றுவிடும். கர்ப்ப காலத்தில், பெண்கள் லேசான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய முடியும். ஆனால் தற்போது ஒரு பெண்ணின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பாஸ்தா வேகவில்லை என்பதற்காக ரூ. 40 கோடி கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் விட்ட பெண்..!!

View post on Instagram

அதில், 9 மாத கர்ப்பிணிப் பெண் ஜிம்மில் சில நேரங்களில் தலைகீழாகவும் சில சமயங்களில் நேராகவும் உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பீதியை கிளப்பி வருவதோடு, மக்களும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் landra.elisabeth என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், பெண் தனது பெரிய வயிற்றுடன் ஜிம்மில் தலை கீழாக நிற்பதை காணலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், எனது கர்ப்ப காலம் முழுவதும் நான் இந்த உடற்பயிற்சியை செய்துள்ளேன். மேலும் எனது மருத்துவரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவை சீனா எச்சரித்தது:பென்டகன் அறிக்கை

View post on Instagram

இந்த பெண் 38 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவத்திற்கு இன்னும் ஒன்றரை வாரங்கள் மட்டுமே உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதாவது, இவர்களுக்கு குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம், ஆனால் இந்த பெண் தனது இரண்டு கால்களையும் காற்றில் வைத்து தரையில் கைகளை ஊன்றி ஸ்டண்ட் செய்யும் விதம் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இருக்கும் கர்ப்பிணி பெண் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர். அவருடைய பெயர் லாண்ட்ரா எலிசபெத். அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரது பக்கத்தில் அவரது பல புகைப்படங்களை காணலாம். அவரின் உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அந்தப் பெண்ணின் நெகிழ்ச்சியைக் கண்டு சிலர் திகைத்தனர்.