பாஸ்தா வேகவில்லை என்பதற்காக ரூ. 40 கோடி கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் விட்ட பெண்..!!
சொன்ன நேரத்தில் பாஸ்தா வேகவில்லை என்பதற்காக, அதை தயாரித்த நிறுவனத்துக்கு பெண் ஒருவர் ரூ. 40 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் பாஸ்தா தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வருத்தமடைந்த பெண் ஒருவர், அமெரிக்க உணவு நிறுவனமான கிராஃப்ட் ஹெய்ன்ஸ் மீது ரூ.40 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம், தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்துவிடும் என்று விளம்பரம் செய்ததாகவும், ஆனால் அதை வாங்கி பயன்படுத்தும் போது அதிகம் நேரமானதாகவும் தனது மனுவில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய கிராஃப் ஹெய்ன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், 3.5 நிமிடங்களில் பாஸ்தாவை தயார் செய்ய முடியாது. 3.5 நிமிடங்களில் பாஸ்தா தயாரிக்கும் மேக் மற்றும் சீஸை தான் நாங்கள் விற்பனை செய்கிறோம் என்று விளக்கம் அளித்தார். எனினும், மைக்ரோவேவில் பாஸ்தாவை சமைக்க 3.5 நிமிடங்கள் போதும். ஆனால் அதற்கு என்று சில தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது முக்கியமாகும். அதை அந்நிறுவனம் சரியாக குறிப்பிடவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.
மக்களை கவரும் வகையில், துரித உணவு நிறுவனங்கள் தங்கள் உணவை குறிப்பிட்ட நேரத்தில் தயாரித்து விரைவாக உட்கொள்ளலாம் என்று கூறுவது வழக்கம். ஒரு தயாரிப்பு இந்த வகையான விளம்பரத்தின் மூலம் விற்கப்படுகிறது. ஆனால் அனைத்து தயாரிப்புகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தயாராவது கிடையாது. மாறாக சில நேரங்களில் அதை விட அதிக நேரம் எடுக்கும். அதனால்தான் 3.5 நிமிடங்களில் பாஸ்தா தயாராகவில்லை என்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் வாதமாக உள்ளது.
தினமும் லிப்ஸ்டிக் பூசிக்கொள்வதில் காத்திருக்கும் ஆபத்து..!!
இதனால் தனக்கு அந்நிறுவனம் ரூ. 40 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் பெண் மேக் மற்றும் சீஸ் கோப்பைகளை வாங்கியதாக வழக்கு கூறினாலும், அந்தப் பெண் தனது பாஸ்தாவைத் தயாரிக்க எடுத்த நேரத்தை குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம், இந்த வழக்கைப் பற்றி வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதை 'அற்பமான வழக்கு' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. அதேசமயத்தில் பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த பதிலும் சொல்லப்படவில்லை.