பிரதமர் மோடிக்காக எதையும் செய்யத் துணிந்த நியூசிலாந்து பிரதமர்! என்ன செய்தார் தெரியுமா?
நியூசிலாந்து பிரதமர் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவே பப்புவா நியூ கினியா நாட்டு சிறப்பு விமானம் மூலம் பயணித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டுக்குப் பின் பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் சென்றுள்ளார். அவரைப் போலவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், அதற்காகவே நியூசிலாந்தில் இருந்து பப்புவா நியூ கினியா செல்ல திட்டமிட்டார்.
பிரதமர் மோடிக்கு ஃபிஜி, பப்புவா நியூ கினியா நாடுகள் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிப்பு!!
ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பப்புவா நியூ கினியா செல்லும் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், நியூசிலாந்து பிரதமர் பப்புவா நியூ கினியா சென்றால் ஜோ பைடனைப் பார்த்துப் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நியூசிலாந்து பிரதமரும் தனது பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்று கூறப்பட்டது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், குறிப்பாக பிரதமர் மோடியை மட்டும் சந்திப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், ஹிப்கின்ஸ், தான் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புவதாகவும், அவரைச் சந்திப்பதற்காகவே பிரத்யேகமாக பப்புவா நியூ கினியா செல்ல செல்வதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, இன்று நியூசிலாந்து - இந்தியா பிரதமர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, "நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உடன் ஒரு சிறந்த சந்திப்பு. இந்தியா-நியூசிலாந்து உறவுகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். நமது நாடுகளுக்கு இடையே வணிக மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது பற்றி பேசினோம்" என்று பதிவு செய்துள்ளார்.
பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய சிறப்பு பரிசு இதுதான்!!