சீனாவில் நிமோனியா பரவல் பீதி.. நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்..
உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாக சீனாவிடம் இருந்து குழந்தைகளில் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.
பெய்ஜிங் உட்பட சீனா முழுவதும் உள்ள நகரங்களில் நிமோனியா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் "நோயுற்ற குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன" என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாக சீனாவிடம் இருந்து குழந்தைகளில் சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பு குறித்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது.
இதுகுறித்து WHO வெளியிட்ட அறிக்கையில், தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரிகள் - நவம்பர் 23 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது - சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது மற்றும் இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா (பொதுவாக இளைய குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் SARS-CoV- போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சி இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து, வடக்கு சீனாவில் காய்ச்சல் போன்ற நோய்கள், கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிடம் இருந்து கூடுதல் தகவல்களைத் கோரும் அதே வேளையில், அந்நாட்டில் வசிப்பவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
WHO வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
• சுவாச நோய் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது
• நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
• உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வீட்டிலேயே இருப்பது.
• பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சை பெறுதல்.
• பொருத்தமான முகக்கவசம் அணிதல்.
• நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும்.
• அடிக்கடி கைகளை கழுவுதல்.
சீனாவில் புதிய நிமோனியா பரவல் : முக்கிய தகவல்கள்
உலகளவில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய்கள் பரவுவதைக் கண்காணிக்கும் அமைப்பான The Telegraph, ProMed என்ற அமைப்பு சீனாவில் பரவும் நோய் குறித்து தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் குழந்தைகளில் "கண்டறியப்படாத நிமோனியா" தொற்றுநோய் பரவுவதாக தெரிவித்துள்ளது. .
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், அந்த அமைப்பு ஒரு எச்சரிக்கை விடுத்தது. இந்த அமைப்பு Sars-Cov-2 என்று பெயரிடப்பட்ட (கோவிட்) ஒரு மர்ம வைரஸை உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரிகள் உட்பட பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே அதிகரிக்கும் இதய நோய்கள்.. நோயை தவிர்க்க என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்?
இதனிடையே சீனாவில் பரவும் நிமோனியா குறித்து தைவானின் FTV செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வருகையால் போராடி வருவதாக தெரிவித்துள்ளது.
பெங்ஜிங்கில் வசிக்கும் நபர் வெய் என்ற நபர் அந்த செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து பேட்டியளித்த போது “ பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இருமல் மற்றும் எந்த அறிகுறிகளும் இல்லை. அவர்களுக்கு அதிக வெப்பநிலை (காய்ச்சல்) உள்ளது மற்றும் பலருக்கு நுரையீரல் முடிச்சுகள் உருவாகின்றன" என்று தெரிவித்தார்.