Asianet News TamilAsianet News Tamil

விண்வெளியில் மீன் குழம்பு சாப்பிட உள்ள சுனிதா வில்லியம்ஸ்.. சுவாரஸ்ய தகவல் சொன்ன நாசா..

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள சுனிதா தன்னுடன் மீன் குழம்பை எடுத்து சென்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

Nasa says Sunita Williams To Enjoy Fish Curry At Her Home In Space Rya
Author
First Published Jun 9, 2024, 3:45 PM IST

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விண்கலம், பூமியின் மேல் விண்வெளியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணத்தை தொடங்கியது. 

27 மணி நேர பயணத்திற்கு பின் ஜூன் 6, இரவு 11 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தார். விண்வெளி மையத்திலிருந்த 7 வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்வது இது 3-வது முறையாகும். அங்கு அவர்கள் 8 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் ஆய்வை முடித்து கொண்டு பூமிக்கு திரும்ப உள்ளனர். 

இந்த நாட்டில் ஜீன்ஸ், மஞ்சள் டிரஸ் போடக்கூடாது.. சமோசா சாப்பிட இந்த நாட்டில் தடை.. என்னங்க சொல்றீங்க..

இந்த பயணத்தின் போது சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் மீன் குழம்பை எடுத்து சென்றுள்ளார். நாசாவும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் ஒவ்வொரு முறை விண்வெளிக்கு செல்லும் போதும் தன்னுடன் இருக்கும் சில பொருட்களை விண்வெளிக்கு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!

இதற்கு முன்பு அவர் விண்வெளிக்கு சென்ற போது பகவத் கீதை, சமோசா ஆகியவற்றை எடுத்து சென்றார். அந்த வரிசையில் தற்போது மீன் குழம்பு, விநாயகர் சிலை ஆகியவற்றை தன்னுடன் எடுத்து சென்றுள்ளார். 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள தனது வீட்டுக்கு மீன் குழம்பை எடுத்து சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ள நாசா இதன் மூலம், அவர் தனது வீட்டை போல் உணர்வதாகவும் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios