3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!
போயிங் ஸ்பேஸ் வெளியிட்ட வீடியோவில், வில்லியம்ஸ் காப்ஸ்யூலுக்கு வெளியே வருவதைக் காணலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில், சுனிதா நடனம் ஆடியபடி நுழைகிறார். பின், மற்ற விண்வெளி வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்.
58 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 5ஆம் தேதி புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் விண்வெளிக்குப் பயணத்தைத் தொடங்கினார். அவருடன் மற்றொரு நாசா விண்வெளி வீரரான பேரி வில்மோரும் பயணித்தார்.
வியாழக்கிழமை போயிங் ஸ்டார்லைனர் கேப்சூல் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ், உற்சாகத்துடன் நடனம் ஆடிய காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
இது குறித்து போயிங் ஸ்பேஸ் வெளியிட்ட வீடியோவில், வில்லியம்ஸ் காப்ஸ்யூலுக்கு வெளியே வருவதைக் காணலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில், சுனிதா நடனம் ஆடியபடி நுழைகிறார். பின், மற்ற விண்வெளி வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்.
பறவைக் காய்ச்சலுக்கு முதல் பலி! மனிதர்களுக்கு ஆபத்து என எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
ஸ்டார்லைனர் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், அந்த விண்கலத்தின் முதல் பயணத்திலேயே அதை இயக்கி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் வில்லியம்ஸ் இரண்டு முறை விண்வெளி பயணங்கள் மேற்கொண்டு மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார்.
2006-2007 மற்றும் 2012 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணத்த அவர், விண்வெளியில் அதிக முறை நடந்த சாதனையைப் படைத்தார். 7 முறை செய்த விண்வெளி நடையில் மொத்தம் 50 மணிநேரம், 40 நிமிடங்கள் நடந்திருந்தார்.
ஸ்டார்லைனர் கேப்ஸ்யூல் சுமார் 26 மணிநேரம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். பிறகு வில்லியம்ஸ் மற்றும் வில்மோருடன் 500 பவுண்டுக்கும் அதிகமான சரக்குகளையும் சுற்றுப்பாதையில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும்.
இரண்டு விண்வெளி வீரர்களும் சுமார் ஒரு வாரம் அங்கு தங்கி, சோதனைகளை நடத்தி, ஸ்டார்லைனரின் அமைப்புகளை சரிபார்க்க உள்ளனர். பிறகு பூமிக்குத் திரும்பும் அவர்கள் பாராசூட் உதவியுடன் மேற்கு அமெரிக்காவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வில்லியம்ஸின் தந்தை குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர். தாய் ஸ்லோவேனியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். முந்தைய விண்வெளிப் பயணங்களின்போது சுனிதா வில்லியம்ஸ் தனது இந்திய-ஸ்லோவேனிய பாரம்பரியத்தைக் குறிக்கும் பொருட்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார்.
இன்ஸ்டாவில் நாசா கொண்டு வந்த 3D ஃபில்டர்! எப்படி யூஸ் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!