பறவைக் காய்ச்சலுக்கு முதல் பலி! மனிதர்களுக்கு ஆபத்து என எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
59 வயதான நோயாளி மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மே 23ஆம் தேதி உலக சுகாதார மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒரு மனிதருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறியிருந்தது.
பறவைக் காய்ச்சல் தொற்றினால் முதல் முறையாக ஒரு மனிதர் உயிரிழந்துள்ளார். இதனை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை உறுதிப்படுத்தி, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சினைகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி, ஏப்ரல் 24ஆம் தேதி உயிரிழந்தார். பறவைக் காய்ச்சல் பிற விலங்குகளைப் பாதித்து இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
59 வயதான நோயாளி மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மே 23ஆம் தேதி உலக சுகாதார மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒரு மனிதருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறியிருந்தது.
மெக்சிகோ நாட்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது குறித்த பதிவுகள் இருந்தாலும், இந்த வைரஸ் பரவலுக்கான ஆதாரம் என்னவென்று தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.
பறவை காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன. தொடர்ந்து மெக்ஸிகோவின் மற்ற மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டது.
முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தாலும் கோழிகளில் இருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது.
பறவைக் காய்ச்சலின் H5N1 மாறுபாடு, அமெரிக்காவில் உள்ள கறவை மாடுகளிடையே பல வாரங்களாக பரவி வருகிறது. அதே சமயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மனிதனிடமிருந்து மனிதனுக்கு தொற்று ஏற்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை. மாறாக, இந்த நோய் கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றுகிறது.