Watch | சிங்கப்பூர் வானில் தோன்றிய மர்ம கரும் புகை வளையம்! மக்கள் பீதி!
சிங்கப்பூர், செந்தோசா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வானில் ஒரு கரும்புகை வளையம் தென்பட்டது. இது என்ன மாதிரயான வானிலை நிகழ்வாக இருக்கும் என மக்கள் குழம்பியுள்ளனர்.
சிங்ககபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை செந்தோசா தீவில் இருந்தவர்களுக்கு ஓர் ஆச்சரிய நிகழ்வு ஏற்பட்டது. அங்கு மாலை வேளையில் வானில் கரும்புகை வளையம் தென்பட்டது. அது வானிலை நிகழ்வா அல்லது வேறு ஏதேனும் நிகழ்வான என யோசித்து மக்கள் பீதிடையந்தனர்.
கரும்புகை வளையம் தொன்றிய போது, அங்கிருந்த நூருதீன் செலாமாட் என்வபர், அந்த வளையத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த வீடியோ தற்போது 17,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது.
மெதுவாக நகர்ந்த அந்த கரும்புகை வளையம், சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. முன்னதாக, அந்த கரும்புகை வளையம் நகர நகர அங்கிருந்த திரளாம மக்களும் அதைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர்.
இதேபோல், இதற்கு முன்பு கடந்த 2017 மற்றும் 2022-லும் செந்தோசா தீவில் இதுபோன்ற கரும்புகை வளையங்கள் தோன்றி தென்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மனநலக் கல்வி! அதை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசு!
இந்த கரும்புகை வளையம் குறித்து கூடுதல் தகவல்களுக்காக, செந்தோசாவையும், வானியல் ஆய்வு நிபுணர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கீழ்காணும் வீடியோ, கடந்த மார்ச் 23ம் தேதி மாஸ்கோவில் ஏற்பட்ட கரும்புகை வளையத்தின் வீடியோ, இதே போன்றுதான் சிங்கப்பூரின் செந்தோசா தீவிலும் ஏற்பட்டது குறிப்படித்தக்கது.