சிங்கப்பூர்.. லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. இந்த நிலை மாறவே மாறாதா? - முதலாளிகள் சொல்வதென்ன?

சிங்கப்பூரை பொறுத்தவரை, தமிழர்கள் உள்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கென்று தனியே தங்கும் விடுதிகள், தனி போக்குவரத்து என்று சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது சிங்கப்பூர் அரசு.

Petition to stop transporting migrant workers in lorry in Singapore but 18000 industries oppose it

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூரில் வந்து தங்கி வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளாக அவர்கள் பணியிடங்களுக்கு செல்வதற்கு சிறு ரக லாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த சிறுரக லாரிகளில் பயணிக்கும் பொழுது சில சமயங்களில் விபத்தில் சிக்கி வெளிநாட்டு ஊழியர்கள் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு. 

குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு லாரி விபத்தில், கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முந்தைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லாரிகளில், மேலே எந்தவித தடுப்புகளும் இல்லாமல் இருந்தது. இதனால் சில சமயங்களில் மழை பெய்யும் பொழுது அதில் நனைந்து கொண்டே பணிகளுக்கு செல்லும் வெளிநாட்டு ஊழியர்களின் அவல நிலையையும் பலர் கண்டு அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.  

தமிழுக்கும் மதிப்பு கொடுக்கும் சிங்கப்பூர்! பிரதமரின் தேசிய தினச்செய்தியை தமிழில் வாசிக்கும் அமைச்சர் சண்முகம்

தற்பொழுது சில மாற்றங்கள் அந்த லாரிகளில் செய்யப்பட்டிருந்தாலும், ஆபத்தான முறையில் தான் இன்றளவும் வெளிநாட்டு ஊழியர்கள் அதில் பயணத்து வருகிறார்கள் என்று பல அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச்செல்வதை தடை செய்யவேண்டும் என்று 2 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை சுமார் 18,000 நிறுவனங்கள் எதிர்த்துள்ளன. 

இந்த விஷயம் குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனங்கள், ஊழியர்களை லாரிகளில் இல்லாமல் பிற வகையிலான போக்குவரத்தின் மூலம் அழைத்து செல்வது "கட்டுப்படியாகத" ஒரு விஷயம் என்று தெளிவாக கூறியுள்ளனர். தொழிலாளர்கள் தற்பொழுது பயணிக்கும் லாரிகளில் இன்னும் அதிக அளவிலான வசதிகளை செய்து தர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் அதைத் தவிர பிற போக்குவரத்து முறைக்கு மாற்றும் பொழுது அது நிச்சயம் தங்களுடைய நிறுவனங்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். அந்த லாரிகளில் பயணிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை மேன்படுத்த, அனைத்து விதமாக பாதுகாப்பு கருவிகளையும் அதில் பொறுத்த வழிவகுக்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓட்டுநருக்கு அருகில் அவருக்கு உதவ ஒரு நபர் அனுப்பப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக நிறுவன முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

4 கி.மீக்கு ரூ.4,300 கட்டணம் செலுத்திய Uber பயனர்.. ஷாக்கான CEO என்ன சொன்னார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios