வாழ்க்கைக்கு வழிகாட்டும் மனநலக் கல்வி! அதை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசு!

வாழ்க்கை நெறிமுறைகள் போதிக்கும், மனநலக் கல்வியையும், அதற்கான நடவடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு ஊக்குவித்து வருவதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

Mental health education to guide life! The government of Singapore promotes it!

சிங்கப்பூர் நாட்டின், கல்வித்துறை அமைச்சகம் கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்திய மன நலக் கல்வியையும் அதற்கான ஆதரவு நடவடிக்கைகளையும் தற்போது மேலும் ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளிகளில், தொடக்க நிலையிலிருந்து கல்லூரி பல்கலைக்கழகப் வகுப்புகள் வரையிலும் நற்பண்புகளை வளர்க்கும் மனநலக் கல்வி, குடியுரிமைக் கல்வித் திட்டத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் உயர்நிலை கல்வி நிலையங்களிலும் மனநல பாடத் திட்டங்களும், பயிலரங்குகளும் உள்ளன என்பதைக் சிங்கப்பூர் அரசின் கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்துள்ளார்.

10 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களின் மரணங்களுக்கான முக்கியக் காரணமாக தற்கொலை இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் மற்றும் உயர்க்கல்வி நிலையங்கள் போன்றவற்றில் மன நலக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் அமைச்சர் சான் சுன் சிங் பதிலளித்தார்.

பூனை குறுக்கே வந்தால் கடந்து செல்வது துரதிர்ஷ்டமா? பூனையால் வரும் நல்ல பலன்கள் என்ன தெரியுமா?

மாணவர்களுக்கான ஆதரவைக் பெருக்கவும், அவர்கள் நல்வழிப்படுத்தி மீட்டெடுக்கவும் கல்வியாளர்களும் பெற்றோருடன் இணைந்து பணிபுரிகின்றனர். மன நலப் பிரச்சினைகளின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு தேவையான மனநலப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மனநலப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, தேவைப்படும் உதவிகள் செய்து கொடுப்பதாகவும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

3,400 ஆண்டுகள் பழமையான நகரம் நதிக்கு அடியில் கண்டுபிடிப்பு.. வறட்சியால் வெளிவந்த வரலாற்று உண்மை..

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி! யார் அந்த தம்பதி?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios