Modi speech in russia

காரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவதில் இந்தியா அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த பூமியை அழகாகவும், சுத்தமாகவும் விட்டுச் செல்வோம் என்று சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி உருக்கமாகப் பேசினார்.

அமெரிக்கா வெளியேறியது

190 நாடுகள் கையொப்பம் இட்டு, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் திடீரென நேற்று விலகுவதாக தெரிவித்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அவருக்கு நேர் எதிராக, பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ரஷிய பயணம்

4 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிரஷியாவுக்கு நேற்றுமுன்தினம் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர்புதினுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையொப்பமிட்டார்.

பொருளாதார மாநாடு

இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு’(எஸ்.பி.ஐ.இ.எப்.) நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-

எங்கள்கடமை

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டு இருந்தாலும் சரி, அல்லது கையொப்பம் இடாமல் இருந்தாலும் சரி, எங்களுடைய கடமை என்பது இந்த பூமியையும், பருவநிலையையும் எதிர்கால சந்ததியினருக்காக அழகாகவும், சுத்தமாகவும் விட்டுச் செல்வதாகும். இயற்கை நாங்கள் அழிக்கவோ, சுரண்டவோ மாட்டோம்.

பாதுகாக்க

கடந்த 2015ம் ஆண்டு நடந்த பாரீஸ் பருவ நிலைமாற்ற ஒப்பந்தத்தில் 190 நாடுகளுடன் ஒரு நாடாக இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது. ஆதலால், இந்த சுழலை காக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

பாதிப்பு இல்லாமல்

புதிய இந்தியாவை உருவாக்க எங்களிடம் மிக எளிமையான வழிகள்தான்இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேதத்தை உதாரணமாக காட்டி உங்களிடம் கூறுகிறேன், இயற்கைக்கு சேதம் விளைவித்து அனுபவிப்பது என்பது குற்றமாகும். பசுமாட்டிடம் எப்படி அதற்கு சேதம் இல்லாமல் பால் கறக்கிறோமோ அதுபோல், பாதிப்பு இல்லாமல் நாம் இயற்கையை அனுபவிக்க வேண்டும்.

எதிர்காலசந்ததி

பாரீஸ் பருநிலை மாற்ற ஒப்பந்தத்தில் யார் விலகினாலும் அதுகுறித்து கருத்து கூற அவசியமில்லை. நான் எந்தப் பக்கம் இருக்கிறேன் என்பது குறித்தும் சிந்திக்கவில்லை என்னுடைய நோக்கம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு பூமியை அழாககவும், சுத்தமாக விட்டுச் செல்ல வேண்டும்.

புதுப்பிக்கதக்க எரிசக்தி

இயற்கை சூழலை பாதுகாக்க இந்தியா அதிகமான அளவில், புதுப்பிக்க கூடிய சக்தியான சூரிய ஒளி மின்சக்தியில் முதலீடு செய்து வருகிறது. 2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்க தக்க மின்சாரம் எடுக்கப்படும். நான் குறிப்பிடுவது அணுமின்சாரம் இல்லை.

எப்போது உண்டானது

சூரிய சக்தி, காற்றாலை, பயோ கியாஸ், நீர் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் எடுப்போம். ஏனென்றால் உலகிற்கு நாங்கள் பொறுப்பு மிக்க நாடாக உருவாகி வருகிறோம். பூமியின் சுழலை காப்பது என்பது இப்போது எங்களுக்கு இருக்கும் கடமை அல்ல. அது எப்போதோ எங்களுக்குள் உண்டான கடமை உணர்ச்சியாகும்.

தனி அமைச்சரவை

நான் குஜராத் முதல்வராக இருந்தபோதே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து விவாதித்துள்ளேன். உலகிலேயே குஜராத் மாநிலம் தான், சூழ்நிலையை பாதுகாக்க தனியாக அமைச்சரவையை உண்டாக்கியது.

40 கோடி

கடந்த 3 ஆண்டுகளில் 40 கோடி எல்.இ.டி.பல்புகளை வினியோகம் செய்து, மின்சாரத்தை சேமித்து இருக்கிறோம். சூழலையும் பாதுகாத்து இருக்கிறோம்.

வானமே எல்லை

பொருளாதார வளர்ச்சிக்காக உங்கள் அனைவரையும் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வரவேற்கிறேன். 125 கோடி மக்களும் உங்களை வரவேற்கிறார்கள், உலகின் மிக பழையான நாடு உங்களை வரவேற்கிறது. வானம்தான் எல்லை, மீண்டும் உங்களை முதலீடு செய்ய வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினா்ர்