சொந்த வீட்டை விற்கும் மார்க் ஜூர்க்கர்பெர்க்.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா? வாயை பிளந்த நெட்டிசன்கள் !

3 மடங்கு லாபத்திற்கு தனது சொந்த வீட்டை மார்க் ஜூர்க்கர்பெர்க் விற்றுள்ளார். இதுதான் தற்போதைய ட்ரெண்டிங் டாபிக்.

Mark Zuckerberg sells his San Francisco house for 31 million

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. 2022ஆம் ஆண்டின் மதிப்பின்படி மார்க் ஜூர்க்கர்பெர்க் அவர்களுக்கு 67.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இந்த நிலையில் அவர் தனக்கு சொந்தமான சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த செய்திதான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் டாபிக்.

பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டை $31 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டில் அவர் இந்தவீட்டை வாங்கிய தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு சொந்தமான சான் பிரான்சிஸ்கோ வீடு மிகவும் விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகும். 

Mark Zuckerberg sells his San Francisco house for 31 million

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

ஜுக்கர்பெர்க் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வீட்டை சுமார் $10 மில்லியனுக்கு வாங்கினார். 7,000 சதுர அடிக்கும் மேலான இந்த வீடு டோலோரஸ் பூங்காவில் உள்ள லிபர்ட்டி ஹில் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடு 1928ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் வீடு மட்டும் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான், 2013ல் பல மில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு அந்த வீட்டில் மேற்கொண்டார்கள். 

அதில் சலவை அறை, ஒயின் அறை, வெட் பார் மற்றும் கிரீன்ஹவுஸ் போன்ற மாற்றங்களும் அடங்குகிறது. 1928ம் ஆண்டில் கால் ஏக்கர் நிலத்தில் கட்டமைக்கப்பட்டதாக விற்பனைக்கான விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் வேலி, லேக் டாஹவ், ஹவாய் ஆகிய இடங்களிலும் மார்க் ஜக்கர்பெர்க்கிற்கு வீடுகள் உள்ளன. தற்போது மார்க்கின் சொத்து மதிப்பு 61.9 பில்லியன் டாலர்.  உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 17ஆம் இடத்தில் இருக்கிறார்.

Mark Zuckerberg sells his San Francisco house for 31 million

அவரது நிகர மதிப்பு அமெரிக்காவில் உள்ள சராசரி குடும்ப வருமானத்தின் 917,474 மடங்குக்கு சமம். ஷார்ட் வீடியோக்களைக் கொண்ட TikTok சமூக தளத்துக்குப் பிறகு அதன் பயன்பாடுகளை தனது சோஷியல் மீடியாக்களுக்கு மாதிரியாக்கும் முயற்சியில், ஜூலை 21 அன்று மெட்டா பிளாட்ஃபார்ம்கள் அதன் பேஸ்புக் பயன்பாட்டில் அதன் ஃபீட்களை உருவாக்கி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios