BREAKING: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் தெறித்து ஓடிய பொதுமக்கள்

கிழக்கு நியூ கினியாவில் உள்ள பப்புவா நியூ கினியா பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Magnitude 6.2 earthquake strikes Papua New Guinea

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட-வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் இருந்தது மற்றும் 200 கிமீ ஆழத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது என்று EMSC தெரிவித்துள்ளது.

கிழக்கு பப்புவா நியூ கினியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

Magnitude 6.2 earthquake strikes Papua New Guinea

இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல உயிர் மற்றும் பொருட்கள் சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios