சிங்கிள்ஸ்க்கு அடித்த ஜாக்பாட்... காதலி -காதலன் வேண்டுமா..? இதோ வந்து விட்டது காதல் ரயில்..!

திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள்- இளைஞிகளுக்கு இடையே காதலை ஏற்படுத்துவதற்காக புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

love train is specially designed for people to fall in love

திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள்- இளைஞிகளுக்கு இடையே காதலை ஏற்படுத்துவதற்காக புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.love train is specially designed for people to fall in love

சீனாவில் திருமணமாகாத இளைஞர்கள், பெண்கள் 200 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களில் பலரும் கல்வி, வேலை என பிஸியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லாமல் போய் விடுகிறது. ஒருவொருக்கொருவர் நெருங்கி பேசி கொள்ளாததால் பலரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வருகின்றனர்.

love train is specially designed for people to fall in love

அவர்களை காதல் வயப்படுத்த சீனா செய்திருக்கும் முயற்சிதான் காதல் ரயில். இந்த ரயிலில் 1000 பேர் வரை பயணிக்கலாம். சோன்கிங்கிலிருந்து கியாங்ஜியாங் வரை 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் இந்த ரயிலில் உணவகம், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு பகுதி என பல்வேறு அம்சங்களும் உள்ளன. இந்த மூன்று நாள் பயணத்தில் அதில் பயணிக்கும் பெண்கள், ஆண்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகி பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்கின்றனர்.love train is specially designed for people to fall in love

இந்த ரயிலில் பயணிக்க சிங்கிள்ஸ்க்கு மட்டுமே அனுமதி. ஆண்டுக்கு ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முறை ஆகஸ்டு 10ம் தேதி தொடங்கி முடிந்த இந்த காதல் ரயில் சேவையால் 10 ஜோடிகள் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios