ஊரடங்கை தளர்த்தியதால் பெரும் சிக்கல்... அதிவேகம் காட்டும் கொரோனா தொற்று..!

உலகம் முழுவதும் கொரோனா மிரட்டி வரும் நிலையில், ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்தியதால் கொரோனா பவரவல் மிக வேகமாக பரவி வருகிறது.  
 

Loss of curfew is a big problem ... high-speed corona infection

உலகம் முழுவதும் கொரோனா மிரட்டி வரும் நிலையில், ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்தியதால் கொரோனா பவரவல் மிக வேகமாக பரவி வருகிறது.  

ஜெர்மனியில் இதுவரை, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், 1.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6,467 பேர் உயிரிழந்துள்ளனர்; 1.13 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம், 'கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. முகக் கவசம் அணிவது மட்டும் கட்டாயம். மக்கள் இதை முழுமையாகப் பின்பற்றினால், கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்' என, ஜெர்மனியின் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.Loss of curfew is a big problem ... high-speed corona infection

ஜெர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் வழக்கம் போல் வெளியில் சுற்றத் துவங்கினர். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக புதிதாக தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், 1,478 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.Loss of curfew is a big problem ... high-speed corona infection

'முறையான ஆய்வு செய்யாமல் ஊரடங்கை தளர்த்தியதே பாதிப்புகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. மக்களின் உயிருடன் ஜெர்மன் அரசு விளையாடுவதை நிறுத்த வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios