Asianet News TamilAsianet News Tamil

சீனர்களை அவமானம் செய்த சிங்களர்கள்...!! ஓட்டலுக்கு உள்ளே வரக்கூடாது என கட்டுதிட்டம்...!!

இந்நிலையில்  தங்களது  நாட்டிற்குள்  கொரோனா பரவி விடக்கூடாது  என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகள் இறங்கியுள்ளன . 
 

Lankan's very badly  insulting chines for koronu panic - chaine's don't come inside notice bored front of hotels in kolambo
Author
Chennai, First Published Jan 31, 2020, 1:01 PM IST

கொரோனா வைரஸ் எதிரொலியாக தற்காலிகமாக சீனர்களுக்கு தங்களது உணவகத்தில் அனுமதி இல்லை என இலங்கையைச் சேர்ந்த உணவு விடுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது,   2020 ஆண்டின் தொடக்கமே சீனாவுக்கு  போதாத காலமாக அமைந்துவிட்டது . கொரோனா வைரஸ்  என்ற கொடிய வைரஸ் அந்நாட்டின் மிக வேகமாக பரவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது .  நோயை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் போராடி வந்தாலும் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. 

Lankan's very badly  insulting chines for koronu panic - chaine's don't come inside notice bored front of hotels in kolambo 

இதுகுறித்து தெரிவித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் ,  இந்த வைரஸை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார், அதே நேரத்தில் கொரானோவை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.   இந்த  கொரோனா வைரஸ் ஒரு அரக்கனை போல மக்களை கொடூரமாக வேட்டையாடி வருகிறது என அவர் ஜி ஜின்பிங் வேதணை தெரிவித்துள்ளார்,  இந்த காய்ச்சலுக்கு இதுவரை  211 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தாக்கம் உள்ளது .  இந்நிலையில்  தங்களது  நாட்டிற்குள்  கொரோனா பரவி விடக்கூடாது  என்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகள் இறங்கியுள்ளன . 

Lankan's very badly  insulting chines for koronu panic - chaine's don't come inside notice bored front of hotels in kolambo

பல நாடுகள் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக துண்டித்துள்ளன ,  இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்களுக்கு தற்காலிகமாக தங்களது உணவகத்தில் அனுமதி இல்லை என இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு உணவு விடுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது .  அதேபோல் சீனர்கள் பயணிக்கும் வாகனங்களிலும்  பயணிக்க இலங்கை பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதாவது சீனாவைச் சேர்ந்த  எல்லோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று கருதக்கூடாது என இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios