சீனாவின் சினத்தை சின்னாபின்னமாக்கிய சிங்கத் தமிழன்... நாதியற்றுப்போன பாகிஸ்தான்..!

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு விதிகள் எங்களது நாட்டுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இந்தியாவிடம் சீனா ஒப்புக் கொண்டுள்ளது. 

Jai Sankar Folded In China

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு விதிகள் எங்களது நாட்டுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இந்தியாவிடம் சீனா ஒப்புக் கொண்டுள்ளது. 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால், கோபம் அடைந்த பாகிஸ்தான் சீனாவிடம் உதவியை நாடியுள்ளது. இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.  ஜெய்சங்கரின் இந்தப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  Jai Sankar Folded In China

 நேற்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை ஜெய்சங்கர் சந்தித்தார். அதன் பிறகு சீன துணை அதிபர் வாங் கிஷானை ஜெய்சங்கர் சந்தித்தார். இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்தியா - ரஷ்யா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம், பாரம்பர்ய மருத்துவ துறை, விளையாட்டு தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தொல்பொருள் அருங்காட்சியகம் ஆய்வு ஆகிய நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர்-வாங் சந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது இந்தியாவின்  உள் விவகாரம். அது இந்தியாவின் சிறந்த நிர்வாகத்தையும், சமூக பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.Jai Sankar Folded In China

இந்தியாவின் வெளிப்புற எல்லைகளுக்கோ அல்லது சீனாவுடனான எல்லைக் கோட்டுப்பகுதிக்கோ எந்தவிதமான தாக்கமும் இல்லை. இந்தியா கூடுதல் பிராந்திய உரிமைகோரல்களை எழுப்பவில்லை. இது தொடர்பாக சீன தவறாக நினைத்து கவலைப்பட வேண்டாம்’’ என ஜெய் சங்கர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Jai Sankar Folded In China

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கிற வகையில் சீனாவும் உறுதி அளித்துள்ளது. ’’பிறநாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடுகளை மதிப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறியுள்ளார்.  பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த பிறகு இதனை அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios