ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கிய அவலம்..!! சீனாவின் கூட்டாளி நாட்டுக்கு நேர்ந்த அவமானம்..!!

மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ஒட்டுமொத்த இலங்கை நாடும் இருளில் மூழ்கியது, இதை சரி செய்ய முடியாமல் நீண்ட நேரம் போராடியதால் நாட்டின் தொழில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

It is a pity that the whole country is in darkness, Shame on China's ally

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலபிடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான இங்கு நேற்று இரவு திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இலங்கை நாடும் இருளில் மூழ்கியது. 

It is a pity that the whole country is in darkness, Shame on China's ally

இந்த திடீர் மின்வெட்டால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியதுடன், சாலைகளில் போக்குவரத்து சிக்னல் செயல்படாததால், பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பயணிகளும் பெரும் அவதி அடைந்தனர். இதையடுத்து துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகளில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.அவர்களுடன் மின் வாரிய மூத்த அதிகாரிகள் ஈடுபட்டனர், இதன் பலனாக கொழும்புவில் பல்வேறு இடங்களிலும், தெற்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் 6 மணி நேரத்திற்குப் பின் மின் இணைப்பு சீரானது. 

It is a pity that the whole country is in darkness, Shame on China's ally

எனினும் மற்ற பகுதிகளில் இரவு நெடுநேரமாகியும் மின்னிணைப்பு முழுமை அடையவில்லை, இந்தப் தடங்களுக்கு நாசவேலை காரணமாக இருக்கிறது எனக் கூறிய மின்துறை அமைச்சர் டக்லஸ் அழகப்பெரும, ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். நாட்டின் பல பகுதிகளிலும்  ஏற்பட்டுள்ள மின்சார விநியோக தடை இயல்புக்கு கொண்டு வர மேலும் சில மணிநேரம் செல்லும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சாரத்  தடை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் அழகப்பெரும, மின்சாரத்துறை அமைச்சக செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios