இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவை ஈரான் விலக்கிக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
Iran withdraws support for Pakistan: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பாயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தான் இதனால் கோபமடைந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர். ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை பாகிஸ்தான் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீரில் அதிகாரி உள்பட ஏராளமான மக்கள் பலியாகி விட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
இந்தியாவின் நகரஙகள் மீது பாகிஸ்தான் ஏவி வரும் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்து வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறி வைத்து தாக்கி வரும் நிலையில், பாகிஸ்தானோ அப்பாவி இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் பல்வேறு நாடுகள் இந்தியா பக்கமே உள்ளன. அதாவது அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் நாடுகள்
இதேபோல் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பஹல்காம் தாக்குதலை கண்டித்ததுடன் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளன. பாகிஸ்தானை பொறுத்தவரை துருக்கி அந்நாட்டுக்கு நேரடியாக ஆதரவு கொடுக்கிறது. சீனா மறைமுகமாக உதவி செய்கிறது.
பாகிஸ்தானுக்கு சென்ற ஈரான் அமைச்சர்
இந்நிலையில், முதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த ஈரான், இந்தியாவின் எதிர்ப்பால் அதில் இருந்து பின்வாங்கியது தெரியவந்துள்ளது. அதாவது ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி டெல்லியில் நடந்த இந்தியா ஈரான் கூட்டு பொருளாதார ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நேரடியாக ஈரானில் இருந்து பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தான் ஆதரவை விலக்கிக் கொண்ட ஈரான்
அப்போது இந்தியாவுக்கு எதிரான போரில் பண உதவி, ஆயுத உதவி செய்வதாக பாகிஸ்தானிடம் ஈரானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட இந்தியா, 'பாகிஸ்தானில் இருந்து நீங்கள் எங்கள் நாட்டுக்கு வர வேண்டாம்' என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியிடம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என முடிவெடுத்த ஈரான் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது.
இந்தியா-பாகிஸ்தான் போரில் நடுநிலையை வெளிப்படுத்திய ஈரான்
இதன்பிறகு இந்தியா வந்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியா-பாகிஸ்தான் போரில் நடுநிலையை வெளிப்படுத்தினார். ''இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பிராந்திய நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த, இது நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்தார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவை ஈரன் விலக்கிக் கொண்டது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.


