இந்தியா-பாகிஸ்தான் போர்! ஒன்று திரண்ட ஜி7 நாடுகள்! பரபரப்பு அறிக்கை! யாருக்கு சப்போர்ட்?
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும் என ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

G7 Countries statement on India-Pakistan war
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், G7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தன. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தின.
இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து ஜி7 நாடுகள்
"கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் G7 வெளியுறவு அமைச்சர்களாகிய நாங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியாக, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்," என்று அறிக்கை கூறுகிறது. இருதரப்பு பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
"மேலும் இராணுவ மோதல் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இருதரப்பு பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்" என்று அறிக்கை கூறுகிறது. அமைதியான தீர்வுக்காக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ''உடனடி அமைதிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். மேலும் அமைதியான தீர்வுக்காக இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஊக்குவிக்கிறோம். நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவான மற்றும் நீடித்த இராஜதந்திர தீர்வுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம்" என்று ஜி7 நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
முன்னதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் குறித்துப் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்க அமெரிக்கா விரும்புவதாகக் கூறினார். "இது வெளியுறவுச் செயலாளரும், இப்போது எங்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மார்கோ ரூபியோவும் மிகவும் ஈடுபட்டுள்ள ஒரு விஷயம். இந்தப் பதற்றம் விரைவில் குறைய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார்," என்று அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பழையது என்றும், மேலும் மோதல்களைத் தடுக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் லீவிட் கூறினார்.
போருக்கு இந்தியா-பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
"ஜனாதிபதி டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருப்பதற்கு முன்பே, பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் முரண்பட்ட இரண்டு நாடுகள் இவை என்பதை அவர் புரிந்துகொள்கிறார். இருப்பினும், இரு நாடுகளின் தலைவர்களுடனும், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனும் அவருக்கு நல்ல உறவு உள்ளது. நான் நேற்றுதான் அவரிடம் பேசினேன். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு நாடுகளின் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.