இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுடன் முதன்முறையாக பேசினார். பஹல்காம் தாக்குதலை ஆப்கானிஸ்தான் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

India Talks Taliban Government First Time: பஹல்காமில் பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 26 அப்பாவி மக்களை கொன்றனர். இதற்கு பதிலலடியாக இந்தியா பாகிஸ்தானின் உள்ள 100 பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளியது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி அது பெரும் மோதலாக உருவாகி பின்பு சண்டை நிறுத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலை பல்வேறு நாடுகள் கண்டித்தன. அதில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.

தலிபான் அரசுடன் இந்தியா முதன்முறையாக பேச்சு

ஆப்கானிஸ்தானில் 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பறிய பிறகு அவர்களை இந்தியா மக்களாட்சியாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் இந்தியா மீது நட்புறவை பேணும் ஆப்கானிஸ்தான் பஹல்காம் தாக்குதலை கண்டித்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைசச்ர் ஜெய்சங்கர் சாதனை

அதாவது இந்திய வெளியுறவு அமைசச்ர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் வெலியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தாகியுடன் தொலைபேசியில் பேசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுடன் முதன் முறையாக பேசிய இந்திய அமைச்சரானார் ஜெய்சங்கர். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், ''இன்று (அதாவது நேற்று) மாலை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தாகியுடன் நல்ல உரையாடல் நடந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததை ஆழ்ந்த பாராட்டுகிறேன்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு

தவறான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகள் மூலம் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அவநம்பிக்கையை உருவாக்குவதற்கான சமீபத்திய முயற்சிகளை அவர் உறுதியாக நிராகரித்ததை வரவேற்றோம். ஆப்கானிஸ்தான் மக்களுடனான எங்கள் பாரம்பரிய நட்பையும், தொடர்ந்து ஆதரவையும் அடிக்கோடிட்டுக் காட்டினோம். அவர்களின் வளர்ச்சித் தேவைகள். ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ்தான் மக்களுடனான நமது (இந்தியாவின்) பாரம்பரிய நட்பையும், அவர்களின் வளர்ச்சித் தேவைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதையும் மவ்லவி அமீர் கான் முத்தாகி அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

நாடுகளை அணி திரட்டும் இந்தியா

இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் பக்கம் துருக்கி, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியா பக்கம் ஏராளமான நாடுகள் உள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விடுவதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன்வைக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நாடுகளை தொடர்ந்து அணி திரட்டி வருகிறது. அந்த வகையில் தலிபான் அரசு உடனான 'கன்னி' பேச்சு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.