ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது, ஒன்பது பயங்கரவாத தளங்கள் குறிவைக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்கமளிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது
புதன்கிழமை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்திய ஆயுதப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விவரங்களை வழங்கினர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் அப்போது தெரிவித்து இருந்தார்.
இந்த நடவடிக்கையின் போது ஒன்பது பயங்கரவாத தளங்கள் குறிவைக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். முரிட்கேயில் உள்ள இலக்குகள் உட்பட பயங்கரவாத முகாம்கள் மீதான துல்லியமான தாக்குதல்களைக் காட்டும் வீடியோ ஆதாரங்களை கர்னல் சோபியா குரேஷி பத்திரிகையாளர் சந்திப்பின் போது வீடியோ காட்சியாக விளக்கிக் கூறினார்.
பின்வாங்க மாட்டோம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி:
"ஆபரேஷன் சிந்தூரில், 9 பயங்கரவாத மறைவிடங்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்று வரும்போது அனைத்து தகவல்களையும் வெளியிடுவது நல்லதல்ல. தற்போதைய தாக்குதல்களை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தான் செயல்பட்டால், நாங்கள் பின்வாங்க மாட்டோம்" என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


