சிங்கப்பூரில் இரண்டாம் நாள்.. முக்கிய அமைச்சர்களை சந்தித்த இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் - முழு விவரம்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், உத்தியோகபூர்வ பயணமாக நேற்று முன்தினம் இந்தோனேசியா சென்றிருந்த நிலையில், மூன்று நாள் பயணமாக தற்பொழுது சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள நல்ல உறவை வலுப்படுத்தவும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்துரையாட மூன்று நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள். நேற்று சிங்கப்பூர் சென்ற அவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பல விஷயங்களை உரையாடினார்.
இந்நிலையில் இன்று சிங்கப்பூரின் துணை பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களை சந்தித்து அவர் பேசினார். அப்பொழுது இந்தியா சிங்கப்பூர் ஆகிய இரு தரப்பு கூட்டணி மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும் பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றதாக ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பகுதியில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தியோ சீ ஹீன் அவர்களின் சந்தித்து பல விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமேசான் கிடங்குகளில் Humanoid ரோபோக்கள்.. சோதையோட்டம் ஆரம்பம் - அப்போ ஊழியர்களின் நிலை என்ன?
இந்த மூன்று நாள் பயணத்தில் இறுதி நாளான நாளை, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் அவர்களை சந்தித்து பேசவிருக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நேற்று அக்டோபர் 19 முதல் நாளை அக்டோபர் 21 வரை சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்வார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் அக்டோபர் 18 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் பல முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசிவருகின்றார்.
இந்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த சிங்கப்பூர் பயணத்தின்போது இந்தியாவும், சிங்கப்பூரும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆராயும். கடந்த செப்டம்பர் 17, 2022 முதல் நிறுவப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் மந்திரி வட்டமேசைக்கு இணங்க டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.