Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. தேர்தல் பிரச்சாரம் - தர்மன் சண்முகரத்னம் செலவு செய்தது எத்தனை கோடி தெரியுமா?

Singapore : கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழக வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்கள் வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரு போட்டியாளர்களை விட சுமார் 70 சதவிகிதம் அதிக வாக்குகள் பெற்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

Singapore President Elections How much Tharman Shanmugaratnam spent for Election Campaign ans
Author
First Published Oct 20, 2023, 4:26 PM IST

இந்நிலையில் இந்த அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய அவர் எவ்வளவு செலவு செய்தார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக S$738,717 (US$540,000) செலவிட்டதாக தேர்தல்கள் திணைக்களம் (ELD) இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர்கள் அளித்த தகவல்களை கொண்டு இந்த தொகை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. S$7,38,717 என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்தியாவில் காலியான கனடா தூதரக் கூடாரம்: குடிமக்களுக்கு கனடா எச்சரிக்கை!

தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் தான், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூவரில் அதிக செலவு செய்த நபராக உள்ளார். மேலும் இது S$3,12,131 செலவழித்த Mr Ng Kok Songன் செலவினத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், அதேபோல S$71,366 செலவழித்த திரு. டான் கின் லியானின் செலவை விட 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் S$8,12,822.10 வரை செலவிட அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மூத்த அமைச்சரான திரு. தர்மன், செப்டம்பர் 1-ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றார். திரு எங் 15.72 சதவீதமும், டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

பணம் எப்படி செலவிடப்பட்டது?

திரு. தர்மனின் அதிக செலவு ஆன்லைன் அல்லாத தேர்தல் விளம்பரம் ஆகும், அது சுமார் S$4,81,226 வரை வந்தது என்று ELD தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் பேனர்கள் அச்சிடுவதற்கும் மற்றும் சுவரொட்டிகள் வைப்பதற்கும், அத்துடன் பிரசுரங்களை அச்சிடுவதற்கும், பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள், அவரது பிரச்சார இணையதளம் மற்றும் "இளைஞர்கள் மற்றும் அடிமட்ட" நேர்காணல்களில் செலவழித்ததை உள்ளடக்கிய ஆன்லைன் தேர்தல் விளம்பரங்களுக்காக S$1,41,865 செலவு செய்துள்ளார் தர்மன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

தேர்தல் விதிகளுக்கு முரணான ஆறு பிரச்சார பதாகைகள், கொடிகள் அல்லது சுவரொட்டிகளை அகற்றுவதற்காக ELDக்கு செலுத்தப்பட்ட S$300 டாலருக்கு திரு. தர்மனின் தேர்தல் பிரச்சார செலவில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியாத் ஷ்மோனா நகரை காலி செய்ய இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

Follow Us:
Download App:
  • android
  • ios