இலங்கையில் அதிபர் மைத்திரி பாலசிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தும் ரணிலை பதவி நீக்கம் செய்தும் மைத்திரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்னை பதவியில் இருந்து நீக்க மைத்திரிக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய ரணில் தானே பிரதமர் என அறிவித்துள்ளார்.

இலங்கையின்பிரதமராகரனில்விக்ரமசிங்கேபதவிவகித்துவந்தார்.தற்போதுஅவர்அப்பதவியில்இருந்துபதவிநீக்கம்செய்யப்பட்டார்.அதிபர்சிறிசேனகட்சியும்இலங்கைஅரசியலில்இருந்துவிலகியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து இலங்கையின்பிரதமராகமுன்னாள்அதிபர்மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கைஅதிபர்மைத்ரிபாலசிறிசேனமுன்னிலையில்முன்னாள்அதிபர்மஹிந்தராஜபக்சே புதியபிரதமராகபதவியேற்றுக்கொண்டார்.ரணில்விக்ரமசிங்கேஇந்தியாவில்சுற்றுப்பயணம்முடித்துநாடுதிரும்பியநிலையில்இந்தஅதிரடிமாற்றம்ஏற்பட்டுள்ளது

ஆளும்கூட்டணியில்ஏற்பட்டபிளவைஅடுத்துபிரதமர்பதவியில்மாற்றம்ஏற்பட்டுள்ளதாகஇலங்கைவட்டாரதகவல்கள்தெரிவிக்கின்றன.

இது குறித்து பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமர் ஆகபதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க அதிபர் மைத்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தானே பிரதமராக தொடரப் போவதாகவும் ரணில் விக்கிரசிங்கே அறிவித்துள்ளார்.

இதையடுத்த இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் தனத்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.