வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப், இந்த நடவடிக்கை “உலகில் எந்த நாடும் செய்ய முடியாத அளவுக்கு துணிச்சலானது” என இந்த கைதை வர்ணித்தார். நள்ளிரவில் செய்யப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வெனிசுலாவின் ராணுவ திறன்கள் செயலிழக்கச் செய்ததாகவும் அவர் கூறினார்.
அதிபர் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் வெனிசுலாவின் தலைநகர் காரகஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அமெரிக்க உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து நாட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக டிரம்ப் விளக்கினார்.
மதுரோ மற்றும் புளோரஸ் மீது, அமெரிக்காவின் சதர்ன் டிஸ்ட்ரிக்ட் ஆஃப் நியூயார்க் நீதிமன்றத்தில் “போதைப்பொருள் கடத்தல்” மற்றும் “போதைப்பொருள்–பயங்கரவாத சதித்திட்டம்” தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் கூறினார்.
தற்போது இருவரும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், விசாரணை நியூயார்க்கிலா அல்லது புளோரிடாவிலா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். "வெனிசுலா மக்களுக்கு சுதந்திரமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும்" என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதனிடையே, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பகிர்ந்த தகவல்களின்படி, மதுரோ மற்றும் புளோரஸ் மீது பல சட்டரீதியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது விசாரணை நிலைமையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima கப்பலில் மதுரோ இருப்பதாக டிரம்ப் வெளியிட்டதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே பதட்டம் அதிகரித்து வந்த சூழலில், இந்த சம்பவம் சர்வதேச அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


