இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு டார்கெட்..!! சந்திராயன் திட்டத்தால் தீவிரவாதிகள் உச்சகட்ட எரிச்சல்..!!

சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், அது பாகிஸ்தானுக்கும் அந்நாட்டு தீவிரவாதிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன். அவர்களின் கவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் அடித்தளமாக உள்ளது ஸ்ரீஹரிகோட்டா மீது   திரும்பியுள்ளது

heavy protection to sriharikota after terrorist threat

தென்னிந்தியாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

heavy protection to sriharikota after terrorist threat

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.  போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இது ஒரு புறமிருக்க,  பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும்  ஜெய்ஷ் -இ- முகமது என்ற தீவிரவாத அமைப்புடன்  இணைந்து லஸ்கர்-இ- தொய்பா, ஹல்கொய்தா,  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

 heavy protection to sriharikota after terrorist threat

இந் நிலையில் குஜராத் மாநிலத்தையொட்டி உள்ள கடல்வழியாகவோ அல்லது  இலங்கை கடல்மார்கமாகவோ  இந்தியாவிற்குள் ஊடுருவ  வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தென் இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் முக்கிய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. இதனால்  கடலோர பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், அது பாகிஸ்தானுக்கும் அந்நாட்டு தீவிரவாதிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன். அவர்களின் கவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் அடித்தளமாக உள்ளது ஸ்ரீஹரிகோட்டா மீது   திரும்பியுள்ளதாகவும்,  உடனே  ராக்கெட் ஏவுதளத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

heavy protection to sriharikota after terrorist threat

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளத்தை சுற்றியுள்ள சாலைகளிள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏவுதளத்தையொட்டியுள்ள கடற்கரையோர கிராமங்களிலும் கடலோர காவல்படையில் ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios