பிரிட்டனை அச்சுறுத்தும் வெப்ப அலை.. தானாக பற்றி எறிந்த ரயில் தண்டவாளம்.. அதிகாலையில் அதிர்ச்சி..

வெப்ப அலையால் பிரிட்டனில் ரயில் தண்டவாளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Heat wave threatening Britain.. Train tracks fired, Shocked in early morning..

வெப்ப அலை காரணமாக பிரிட்டனில் ரயில்  தண்டவாளம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வெப்ப அலை என்றால் என்ன.. 

ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை இருக்க வேண்டும், அது சீராக இருப்பது அவசியம், ஆனால்  புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்பிரதேசத்தில் வெப்பநிலை  இயல்புக்கு மாறாக அதிகரிகரிக்கும் போது காற்று மண்டலம் வெப்பமடைந்த ஒரே இடத்தில் மையம் கொள்ளும் போது அங்கு  வெப்ப அலை உருவாகிறது. இதனால் பலர் உயிரழக்கவும் கூடும். திடீர் தீ விபத்துக்களும் ஏற்படும். இது போன்ற வெப்ப அலை தற்போது பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் முழுவதும் வெப்ப அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்தள்ளது.

இதையும் படியுங்கள்: துபாய் தப்பிச் செல்ல முயற்சித்த பசில் ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு!!

ரயில் தண்டவாளத்தில் தீ...

இந்த வெப்ப அலை விளைவாக  மத்திய லண்டனில் உள்ள ரயில் தண்டவாளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு தண்டவாளத்தில் பதிக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இச்சம்பவம் திங்கட்கிழமை (ஜூலை 11) அதிகாலை 5 மணி அளவில் 
நிகழ்ந்துள்ளது. வான்ட்ஸவொர்த்  சாலைக்கும் லண்டன் விக்டோரியாவுக்கும் இடையிலான  தண்டவாளத்தில் இது நடந்துள்ளது. இதனால் விக்டோரியா  மற்றும் பிரிக்ஸ்டன் இடையே ரயில் சேவை  நிறுத்தப்பட்டது. இது குறித்து தென் கிழக்கு ரயில்வேயில் நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் ஒயிட் தனது ட்விட்டர் பக்கத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட  தீ விபத்து குறித்த படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் உடனே தீயை அணைத்த ரயில்வே ஊழியர்களையும், பிரிட்டன் தீயணைப்பு படையினரையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்,

 

மேலும் இந்த விபத்து ஏற்பட்டவுடன் விரைந்து செயல்பட்ட லண்டன் தீயணைப்பு படைக்கும் @netework railSE என்ற தீயணைப்பு படைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏரியாவில் ரயில் சேவைகளை பாதுகாப்பாக மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மற்றோரு டுவிட்டில் தெரிவித்தார். காலை 6 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது அதன் பின்னர் ரயில் பாதைகள் சேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளன, எதிர்வரும் வாரங்களில் வெப்பாலை அதிகரிக்கும் என்பதால் இது ரயில்வே துறைக்கு கடும் சவாலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராகிறார் சஜித் பிரேமதாச! - 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

மேலும் இது குறித்து ஒரு தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், ரயில் தண்டவாளத்தில் உள்ள மரங்கள் மிகவும் வறண்டுபோனதால் தீப்பிடித்திருக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் அதே உறுதியா கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தது. அதே வேளையில் தென்கிழக்கு ரயில்வே பயணிகள் கூடுதல் கட்டணம் இல்லாமல் மாற்று சேவைகளை பயன்படுத்தலாம் என்றும் ரயில்வே நிர்வாகத்தில் அறிவுறுத்தப்பட்டது, ப்ரோம்லி சவுத் லைனில் உள்ள நிலையத்திற்கு மாற்று பேருந்து வழித்தடங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

பிரிட்டன் வானிலை மையம் எச்சரிக்கை...

மேலும் லண்டன் பேருந்துகளில் தங்கள் டிக்கெட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் வெப்ப அலை காரணமாக ரயில்களை மெதுவாக இயக்குமாறும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வரும் நாட்களில் இங்கிலாந்தில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக உயரும் என்றும் திங்கட்கிழமை 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்ததை அடுத்து போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் வெப்ப அலை ஏற்படுத்தும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios