இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராகிறார் சஜித் பிரேமதாச! - 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததையடுத்து, அனைத்துகட்சிகளின் தேர்வாக பரிந்துரைக்கப்பட்ட சஜித் பிரேமதசா இடைக்கால பிரதமராகிறார்.
 

Sajith Premadasa becomes the new interim Prime Minister of Sri Lanka

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அரசை கண்டித்து நாட்டு மக்கள் அனைவரும் உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக போராட்டக்கரார்களாகிய மக்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர்.

இதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து நாட்டின் அடுத்த பிரதமர் மற்றும் அதிபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அடுத்த இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதசா நியமிக்கபடுவார் என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி., அறிவித்துள்ளது.

இலங்கையை போல கலவர பூமியான சீனா... 1.5 பில்லியன் டாலர் வைப்புநிதி முடக்கம்... என்ன நடந்தது?

இதுகுறித்த அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இடைக்கால பிரதமாரக சஜித் பிரேமதசா ஒருமனதாக நியமிக்கும் கோரிக்கையை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்பித்ததாகவும், அதனை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிபடுத்தியுள்ளதாகவும் எஸ்.ஜே.பி., தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் புதிய அதிபர் தேர்வு… அறிவித்தார் சபாநாயகர்!!

இலங்கை நாடாளுமன்றத்தில் வெற்றிபெற 113 MP.,களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், SJB கட்சியில் 50 உறுப்பினர்கள் உள்ளனர். மற்ற அனைத்துகட்சிகளின் ஆதரவும் உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios