Asianet News TamilAsianet News Tamil

பயிற்சியாளருக்கு ஏற்பட்ட சோகம்.. கழுத்தில் விழுந்த 210 கிலோ - சோகத்தில் மூழ்கிய உடற்பயிற்சி கூடம்!

அந்த பயிற்சியாளர் சுமார் 210 கிலோ எடையை தூக்க முயற்சித்தபோது அந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gym Trainer from Indonesia died after a 210 kilo barbell fell on his neck while training
Author
First Published Jul 22, 2023, 9:22 PM IST | Last Updated Jul 22, 2023, 9:22 PM IST

இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த 33 வயதான உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜஸ்டின் விக்கி, தனது உடற்பயிற்சி கூடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி இறந்துள்ள செய்தி அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் வேலை செய்து வரும் ஜிம்மில் சுமார் 210 கிலோ எடையை தூக்க முயற்சித்துள்ளார். 

அப்போது அவர் தூக்கிய அந்த 210 கிலோ எடை கொண்ட பார்பெல், அவர் கழுத்தில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து போன அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

இறந்த ஜஸ்டின் விக்கி கடந்த ஜூலை 15ம் தேதி அவர் பணிபுரிந்து வரும் ஜிம்மில் தனது வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து வந்துள்ளார். அப்போது நின்று கொண்டு ஸ்குவாட் செய்யும் பயிற்சி முறையை அவர் மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளார். 

ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!

சுமார் 210 கிலோ எடைகொண்ட பார்பெல் கொண்டு ஸ்குவாட் செய்து தூக்க அவர் முயற்சித்துள்ளார். ஆனால் தொடக்கத்திலேயே அவர் ஸ்குவாட் செய்ய முடியாமல் தடுமாறியதாகவும், அவர் கழுத்தின் மேலே இருந்த சுமார் 210 கிலோ எடை கொண்ட பார்பெல் அவருடைய கழுத்தில் விழுந்து, அவர் உட்கார்ந்தபடி தரையில் விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். 

இதனால் அவர் கழுத்து எலும்பில் பயங்கர காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்டின் விக்கி காலமானார். அவருடைய மறைவு அவர் பணி செய்து வந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா போட்ட தடையால் அரிசித் தட்டுப்பாடு! அமெரிக்க கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios