இந்தியா போட்ட தடையால் அரிசித் தட்டுப்பாடு! அமெரிக்க கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள்!

இந்தியாவின் ஏற்றுமதி தடை அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே அரிசி தட்டுப்பாடு ஏற்பட வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Panic buying among the Indian diaspora: Global rice shortages feared after India bans exports

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், அமெரிக்காவில் உள்ள கடைகளில் அரிசி வாங்க அதிக அளவில் மக்கள் ஆவர் காட்டிவருகிறார்கள். அனைவரும் முடிந்த அளவுக்கு அரிசி வாங்கி வைத்துக்கொள்ள முயற்சி செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பல்வேறு இடங்களிலும் மக்கள் அளவுக்கு அதிகமாக அரிசி மூட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். பல கடைகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே கொடுக்கப்படும் என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் அரிசி இருப்பு இல்லை என்ற அறிவிப்பு இடம்பெற்றள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் கடைகளில் நீண்ட வரையில் காத்திருந்து முண்டியடித்து அரிசி வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி தடை அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே அரிசி தட்டுப்பாடு ஏற்பட வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ரூ.1,200 கோடிக்கு லண்டனில் மேன்ஷன் வாங்கிய இந்திய தொழிலதிபர் ரவி ரூயா!

இந்தியா உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. உலகின் எல்லா பல நாடுகளில் அரிசி விளைவதில்லை என்பதால், தேவையான அரிசியைப் பெற அவை இறக்குமதி செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் - ரஷ்யா போர், காலநிலை மாற்றம், பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் ஆகிய காரணங்களால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு தேவைக்கு வேண்டிய அரிசி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், இந்தியா பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. இந்த முடிவை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் தேவைக்கு போதுமான அரிசி இருப்பதுடன் அரிசி விலை உயர்வையும் தவிர்க்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி ஆகும் சூழலில் இந்தியாவில் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடு பல நாடுகளில் அரிசி பஞ்சம் ஏற்படும் ஆபத்து குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, துருக்கி, சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் வெகுவாக பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்தால் தப்பிக்கவே முடியாது... முறைகேடுகளை தடுக்க ஸ்கெட்ச் போடும் வருமான வரி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios