துபாய் தப்பி ஓட முயற்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு: கைது செய்யப்படுகிறாரா?

துபாய்க்கு இலங்கையில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே தப்பிச் செல்ல முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்டதாக இன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் துபாய் தப்பிச் செல்ல முயற்சித்து அனுமதி மறுக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 

Gotabaya Rajapaksa failed to flee Sri Lanka

இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த காரணத்தால், சொந்த நாட்டில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவமதிக்கப்பட்டார். அவரது இல்லம் சூறையாடப்பட்டது. வீட்டை விட்டு இரவோடு இரவாக வெளியேறி, ராணுவ மையத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மனைவியுடன் துபாய் தப்பிச் செல்ல கோத்தபய ராஜபக்சே முயற்சி, குடியேற்ற அலுவலக அதிகாரிகளால்  அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அதிகாரபூர்வமாக தனது பதவியை நாளை (ஜூலை 13) ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான பேப்பரிலும் ஏற்கனவே கையெழுத்து போட்டு விட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில்தான், இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில் துபாய் தப்பிச் செல்ல முயற்சித்தார். கொழும்பு விமான நிலையத்திற்கு மனைவியுடன் திங்கள் கிழமை இரவு வந்தார்.

துபாய் தப்பிச் செல்ல முயற்சித்த பசில் ராஜபக்சேவுக்கு அனுமதி மறுப்பு!! 

விமான நிலையம் வந்தவர் விஜிபி வழியாக சென்று பாஸ்போர்ட்டிற்கு முத்திரை வைக்க முயற்சித்தார். அப்போது குடியேற்ற அலுவலக  அதிகாரிகள் பொது வழியில் வருமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. பொது வெளியில் சென்றால், மக்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளார். 

இதற்கு குடியேற்ற அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே கொழும்புவில் இருந்து துபாய் செல்லும் நான்கு விமானங்களை  கோத்தபய ராஜபக்சே தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் கொழும்பு விமான நிலையம் அருகில் இருக்கும் ராணுவ மையத்திற்கு திரும்பச் சென்றார்.

தற்போது அதிபராக இருக்கும்போது வெளிநாடு தப்பிச் சென்று விட்டால், கைதாவதில் இருந்து தப்பி விடலாம் என்பது கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம். இலங்கையில் தொடர்ந்து தங்கி இருந்தால், கட்டாயம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, தவறான பொருளாதார மேலாண்மை, நிதி நெருக்கடி போன்ற காரணங்களுக்கு கைது செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது. 

இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராகிறார் சஜித் பிரேமதாச! - 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

இத்துடன் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழர்களை கொன்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கு இவர் இன்னும் ஆஜர் ஆகாமல் இருக்கிறார். பதவியை இழக்கும்போது, இந்த  வழக்கும் உயிர் பெறும் என்ற அச்சம் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் முடிக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனப் போரின்போது ராணுவத்துறை அமைச்சராக கோத்தபய ராஜபக்சே இருந்தார்.

இவரைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் இவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவும் துபாய் வழியாக அமெரிக்காவுக்கு செவ்வாய் கிழமை காலை முயற்சித்தார். அப்போது விமான நிலையத்தில் இவரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் போராட்டம் நடத்தினர். தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பசில் ராஜபக்சேவுக்கும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். பசில் ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையும்  பெற்று இருக்கிறார்.

சுற்றுலா தலமாக மாறிய அதிபர் மாளிகை! விளையாடி மகிழும் போராட்டக்காரர்கள்!

கோத்தபய சகோதரர்கள் இருவரும் இலங்கையை விட்டு தப்பிச் செல்வதை கேள்விப்பட்ட மக்கள் நீதிமன்றம் முன்பு செவ்வாய்கிழமை குவிந்தனர். கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு யார் எல்லாம் காரணமோ அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். 

வரும் 20 ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும். சமகி ஜன பலவேகய கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதிபராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை சஜித் எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் தேர்வு செய்யப்பட்டால், 2024ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் வரும் வரை இவரே அதிபராக நீடிப்பார். தற்போது அதிபர் கோத்தபய ராஜினாமா செய்து இருப்பதால், அடுத்த அதிபர் பொறுப்பு ஏற்கும் வரை பிரதமர் ரணில் அதிபரின் பொறுப்பையும் ஏற்பார் என்று கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios