3 மணிநேரத்தில் வெளியேற கெடு! காசாவில் ஹமாஸுக்கு முழு பலத்தையும் காட்ட இஸ்ரேல் தயார்!
இன்று 10 மணி முதல் 1 மணி வரை இந்த வழியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் வடக்கு காசாவில் ஒரு பாதுகாப்பான பாதையைத் திறந்துள்ளது. காசாவில் வசிப்பவர்கள் அந்தப் பாதை வழியாக மூன்று மணிநேரத்தில் பாதுகாப்பான தெற்கு காசா பகுதிக்குச் சென்றுவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் நடைபாதையில் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாது" என்று கூறப்பட்டுள்ளது.
'குடிமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான பாதை' என்ற தலைப்பில் சாலா-அல்-தின் தெரு என்ற சாலையின் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: 9 நாளில் 3வது முறை!
"காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் வசிப்பவர்கள் கவனத்திற்கு, ஏற்கெனவே கடந்த நாட்களில், உங்கள் பாதுகாப்பிற்காக தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு உங்களை வலியுறுத்தி இருக்கிறோம். இன்று 10 மணி முதல் 1 மணி வரை இந்த வழியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் தெற்கு காசாவுக்குச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்தக்கொள்ள வேண்டும் என்றும் காசாவில் உள்ள குடிமக்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
"தயவுசெய்து எங்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தெற்கு நோக்கிச் செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்களும் ஏற்கெனவே குடிமக்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டனர்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 2வது போர்முனை உருவாகிறதா? ஈரான் ராணுவ வாகனங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்!