இஸ்ரேலில் 2வது போர்முனை உருவாகிறதா? ஈரான் ராணுவ வாகனங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்!
இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் நடைபெற்றுவரும் சூழலில் ஈரான் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள அல்-புகாமெல் அருகே ஈரான் நாட்டின் ராணுவ வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலுக்கு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை. இத்தாக்குதலை நடத்தியதும் இதுவரை தெரியவரவில்லை. இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் நடைபெற்றுவரும் சூழலில் ஈரான் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது.
இதனிடையே, தெற்கு காசாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரான் இரண்டாவது போர் முனையை உருவாக்க முயல்கிறது என்றும் தனது ஆயுதங்களுடன் சிரியா வழியாக இஸ்ரேலுக்குள் நுழையப் பார்க்கிறது என்றும் மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேலின் சிரிய எல்லையில் நிலவும் சூழ்நிலையை குறித்து ட்விட்டர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றிற்கு பதிலளித்த இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜோசுவா சர்கா, ஈரான் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தகவலை ஆமோதித்துள்ளார்.
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா! வைரலாகும் குஜராத்தி பாடல்!