Asianet News TamilAsianet News Tamil

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய கர்பா! வைரலாகும் குஜராத்தி பாடல்!

நவராத்திரியை முன்னிட்டு குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி கடந்த வாரம் எழுதிய பாடல் தனிஷ்க் பாச்சி இசையில், த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ளது.

PM Modi greets people on Navratri, shares garba penned by him sgb
Author
First Published Oct 15, 2023, 10:56 AM IST | Last Updated Oct 15, 2023, 11:12 AM IST

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'கர்பா' பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.  வெளியான சில மணிநேரங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ள சூழலில் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் எடுத்துக்கூறும் விதமாக பிரதமர் மோடி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் பாடலை பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். தனிஷ்க் பாச்சி இசையமைத்துள்ளார். இயக்குனர் நதீம் ஷா இந்த பாடலை இயக்கி இருக்கிறார்.

இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் நாடு திரும்பிய 4வது விமானம்! ஆபரேஷன் அஜய் மூலம் 918 பேர் மீட்பு!

இந்த பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான உடனேயே பலரும் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிரத்த் தொடங்கினர். இதனால், இந்த வீடியோவின் வியூஸ் சில மணி நேரங்களில் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

இந்த வீடியோ பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "மங்களகரமான நவராத்திரி நெருங்கும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டிகைக்கால பாடல் அனைவரையும் அரவணைக்கட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கர்பாவுக்கு குரல் கொடுத்து இசையமைத்ததற்காக மன்மீத் சிங் மற்றும் ஹர்மீத் சிங்கின் மீட் புரோஸ் (MeetBros) இசைக்குழு மற்றும் திவ்யா குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios