ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்: 9 நாளில் 3வது முறை!
மேற்கு ஹெராத் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 1,000 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 9 நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
வடமேற்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரின் வடமேற்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராத் நகரின் வடமேற்கே 30 கிமீ தொலைவில் இருந்தது. ஹெராத் நகரம் ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
தொடங்கிய மறுநாளே நிறுத்தப்பட்ட நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை!
ஆப்கானிஸ்தான் பூகம்பம் அந்நாட்டு நேரப்பரடி காலை 7.36 அளவில் ஏறபட்டுள்ளது. மேற்கு ஹெராத் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 1,000 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 9 நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்று. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாக்டிகா மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீட்டையும் உடமைகளையும் இழந்துள்ளனர்.