sri lanka: gotabaya rajapaksa:இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்திலிருந்து கொழும்பு திரும்பினார்

கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு நகரம் திரும்பினார். 

Former Sri Lankan President Gotabaya Rajapaksa has returned from Thailand.

கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு நகரம் திரும்பினார். 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவால் கொந்தளித்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர். மக்களின் போராட்டம் உக்கரமடைந்ததையடுத்து, கடந்த ஜூலை 13ம் தேதி இலங்கையிலிருந்து மாலத்தீவு சென்றார். 

sri lanka crisis: gotabaya rajapaksa இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாளை நாடு திரும்புகிறாரா?

Former Sri Lankan President Gotabaya Rajapaksa has returned from Thailand.

அங்குகிருந்து சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே சென்றார். சிங்கப்பூரில் இருந்தவாரே தனது அதிபர் பதவியையும் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அந்நாட்டில் 28 நாட்கள் மட்டுமே இருந்த ராஜபக்சே அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்றார். 

தாய்லாந்து அரசு 90 நாட்கள் வரை கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா வழங்கி இருந்தது. ஆனால், பாங்காக் நகரில் ஒருநட்சத்திர ஹோட்டலில் வெளியேவராமல் கடும் பாதுகாப்புடன் கோத்தபய அடைக்கப்பட்டிருந்தார். 

தாய்லாந்தில் தங்கியிருக்கும்போது எந்தவிதமான அரசியல் செயல்பாடுகளிலும் கோத்தபய ராஜபக்சே ஈடுபடக்கூடாது என்று தாய்லாந்து திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதனால், ஒரு சிறைக்கைதி போன்று வாழ்வதற்கு விரும்பாத கோத்தபய ராஜபக்சே நேற்று நள்ளிரவு கொழும்பு நகருக்கு திரும்பினார்.

starbucks: ceo: ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் சிஇஓ-வாக இந்திய வம்சாவளி லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்

கோத்தபய ராஜபக்சே கொழும்பு நகரம் வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைளையும் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து, கொழும்பு பண்டாரநாயகா விமானநிலையத்தில் நள்ளிரவு கோத்பய ராஜபக்சே வந்து சேர்ந்தார். கோத்தபய ராஜபக்சேவை வரவேற்க இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் வந்திருந்தனர். 

Former Sri Lankan President Gotabaya Rajapaksa has returned from Thailand.

கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ராணுவம், போலீஸார் இணைந்த சிறப்பு பாதுகாப்புப் படையை அரசு உருவாக்கியுள்ளது.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் சென்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு நகருக்கு கோத்தபய ராஜபக்சே திரும்பினார். தாய்லாந்தில் இருந்து கொழும்பு நகருக்கு நேரடி விமானம் ஏதும் இல்லை. இதனால் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய அங்கிருந்து கொழும்பு வந்தார்

Dawood Ibrahim age: ‘நிழல்உலக தாதா’ தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

கொழும்பு நகரில் உள்ள அரசு மாளிகையில் தங்கியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வசதிகளும் தரப்பட்டுள்ளன. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios