பிளிப்கார்ட் நிறுவன CEO திடீரென ராஜினாமா..! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!

பிளிப்கார்ட் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் பின்னி பன்சால் தனது பதிவியை ராஜினாமா செய்து உள்ளார்.

Flipcart ceo resigned his ceo post from flipkart

பிளிப்கார்ட் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் பின்னி பன்சால் தனது பதிவியை ராஜினாமா செய்து உள்ளார்.

பின்னி ஒரு மென்பொருள் வல்லுநர் ஆவார். பிளிப்கார்ட் என்ற இணைய வழி பொருட்கள் விற்பனை நிறுவனத்தை சச்சின் பன்சாலுடன் இணைந்து 2007 ல் தொடங்கினார். அதற்கு முன் அமேசான் நிறுவனத்தில் பணி ஆற்றினார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipcart ceo resigned his ceo post from flipkart

இந்த நிலையில், இவர் மீதான ஊழல் குற்றசாட்டால் தன்னுடைய பதவியை இழந்துள்ளார். இது குறித்து, "வால்மார்ட் நிறுவனம் தெரிவிக்கும் போது, தனிப்பட்ட முறையில் ஊழல் செய்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து பின்னி பன்சால் பதவி விலகுகிறார்". 

இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பின்னி பன்சால் மறுப்பு தெரிவித்து வந்த போதிலும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை சரியான ஆதாரம் இல்லை என்றாலும், விசாரணையில் சில முரண்பாடான கருத்துக்களால் அவர் பதவியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Flipcart ceo resigned his ceo post from flipkart

ஆனால், பிரபல நாளிதழ் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், சச்சின் பன்சால் நிறுவனத்தை அடுத்த கட்ட முயற்சிக்கு எடுத்து செல்ல உள்ளார் என்றும், மேலும் பல புதிய திட்டங்களையும்  சச்சின் பன்சால் கொண்டுவர உள்ளார்.. அதற்கான சரியான நேரம் இதுதான் என பின்னி பன்சால் தெரிவித்து உள்ளதாக குறிப்பிடப்பட்டு  உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Flipcart ceo resigned his ceo post from flipkart

மேலும், பின்னி பன்சால் குறித்து  வால்மார்ட், " இன்று முதல் பிளிப்கார்டின் புது நிர்வாக இயக்குனராக கல்யாண் கிருஷ்ண மூர்த்தி தொடர்வார் என்றும் பிலிப்கார்டின் மற்ற வியாபார பிரிவுகளான ஜபாங் மற்றும் மித்ரா ஆகியவைகளையும் இவரே கவனித்து கொள்வார் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது என்பது  கூடுதல்  தகவல். பின்னி பன்சாலின் ராஜினாமா விஷயம் வர்த்தக உலகில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios