Asianet News TamilAsianet News Tamil

இமயமலை பகுதியில் எப்போது வேண்டுமானாலும் 'பெரும் நிலநடுக்கம்' ஏற்படலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை

நேபாளத்தின் மத்திய பெல்ட் " தொடர்ந்து ஆற்றல் வெளியிடும் துறையாக" அடையாளம் காணப்பட்டுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தயாராக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்..

Experts warns of active seismic belt after Nepal earth quake jolts delhi ncr Ray
Author
First Published Nov 4, 2023, 10:16 AM IST

நேபாளத்தில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்படும் 3-வது நிலநடுக்கம் ஆகும். இதே போல், டெல்லி-என்சிஆர், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட இந்தியா முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் மத்திய பெல்ட் " தொடர்ந்து ஆற்றல் வெளியிடும் துறையாக" அடையாளம் காணப்பட்டுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தயாராக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்..

இமயமலை புவியியல் வாடியா இன்ஸ்ட்யூட்டில் பணிபுரிந்த நில அதிர்வு நிபுணரான அஜய் பால், இதுகுறித்து பேசிய போது “ நேபாளத்தின் டோட்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நவம்பர் 2022 இல் இந்த மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 6 பேர் பலியானார்கள். அக்டோபர் 3 ஆம் தேதி நேபாளத்தைத் தாக்கிய தொடர் நிலநடுக்கங்களும் இதே பகுதியைச் சுற்றியே இருந்தன.எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று” அவர் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகரும் போது யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைப் பகுதியில் 'எப்போது வேண்டுமானாலும்' பெரும் நிலநடுக்கம் ஏற்படும் என்று பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏறக்குறைய 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியத் தட்டு இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கே யூரேசியத் தட்டுடன் மோதும்போது இமயமலை உருவானது.

நேபால் நிலநடுக்கம்.. 128ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. இந்தியா உங்களோடு நிற்கிறது - பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்திய தட்டு அதன் வடக்கு நோக்கி நகர்வதைத் தொடர்வதால், இமயமலையின் கீழ் அழுத்தம் அதிகரித்து, யூரேசிய தட்டுடன் மோதலை உருவாக்குகிறது. இமயமலையின் மீதான அழுத்தம் ரிக்டர் அளவுகோலில் எட்டுக்கும் அதிகமான பெரிய நிலநடுக்கங்களின் மூலம் வெளியாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இவ்வளவு பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை துல்லியமாக கணிக்க வழி இல்லை என்பதே சோகமான விஷயம். 

Follow Us:
Download App:
  • android
  • ios